Latestமலேசியா

மத வேறுபாடுகளை களைந்து, ஒற்றுமையை பேணும் காலம் இது! –வான் அஸிஸா

கோலாலம்பூர், நவ.8- மதச் சுவர்கள் தகர்க்கப் பட்டு, நாட்டில் ஒற்றுமை சிறந்தோங்க நாம் அனைவரும் பாடு பட வேண்டும்” என்று துணைப் பிரதமர் வான் அஸிஸா வான் இஸ்மாயில் கூறினார்.

மத அடிப்படையில் செயல் படாமல், நாட்டின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, அனைத்து தரப்பினரும் செயல் பட வேண்டும். இவ்வாறான நட்புறவுகள் வளர்க்கப் படுவதன் வாயிலாக, மக்கள் மத்தியில் ஒற்றுமை மேலோங்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

நாட்டின் மேம்பாட்டிற்கு சீன சமுதாயம் பெருமளவில் உதவிப் புரிந்துள்ளது என்றும், அதனை பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் எப்போதும் பாராட்டி வருகிறது என்று வான் அஸிஸா சொன்னார்.

நாட்டின் வளர்ச்சியில் சீன சமுதாயத்தின் பங்கை அங்கீகரிக்கும் வகையில், கடந்த வெள்ளியன்று தாக்கல் செய்யப் பட்ட பட்ஜெட் 2019-யில் சீன வகை ஆரம்பப் பள்ளிகளுக்கு ரிம.50 மில்லியன், சீன வகை இடைநிலைப் பள்ளிகளுக்கு ரிம. 15 மில்லியன் மற்றும் சீன தனியார் பள்ளிகளுக்கு ரிம.12 மில்லியனை அரசாங்கம் ஒதுக்கியுள்ளது என்று அவர் சொன்னார்.

“கடந்த பொதுத் தேர்தலில், சீன சமுதாயத்தினர், தங்களின் வாக்குகளை பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக்கு வழங்கியதற்கு நன்றி கூற நான் கடமைப் பட்டுள்ளேன். உங்களின் வாக்குகளை கொண்டு நாங்கள் வெற்றி வாகை சூடி, அரசாங்கம் அமைத்துள்ளோம்” என்று வான் அஸிஸா கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் சீன அசெம்பளி மண்டபத்தின் 95-ஆவது நிறைவு விழாவில் கூறினார்.

அதே வேளையில், நாட்டிலுள்ள அனைத்து தரப்பினரின் விருப்பங்கள் குறித்து சரியான முடிவை பக்காத்தான் அரசாங்கம் எடுக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இதனிடையில், கோலாலம்பூர் மற்றும் சீன அசெம்பளி மண்டபம் மற்றும் அரசாங்கத்துடனான நட்பு என்றும் போல் தொடர வேண்டும் என்றும் துணைப் பிரதமர் விருப்பம் தெரிவித்தார்.

“நாட்டின் வளர்ச்சிக்கும், சீன சமுதாயத்தின் மேம்பாட்டிற்கும் தேவையான கல்வி, கலாசாரம் மற்றும் சமூக பொருளாதார மேம்பாடு தொடர்பில் கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் சீன அசெம்பளி மண்டபத்தின் ஆலோசனைகளை நான் வரவேற்கின்றேன்” என்று அவர் சொன்னார்.

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker