Latestமலேசியா

ரிம. 2.4 பில்லியனை திருப்பித் தருக! – அமெரிக்க வங்கியிடம் லிம் கோரிக்கை

ஜோர்ஜ் டவூன், நவ. 8- 1எம்டிபி நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றியதற்காக ‘ஊதியமாக’ வழங்கப் பட்ட ரிம. 2.4 பில்லியன் தொகையை, அமெரிக்காவின் கோல்ட்மேன் சாக்ஸ் வங்கி நிறுவனம் மலேசியாவிற்கு திருப்பித் தர வேண்டும் என்று நிதியமைச்சர் லிம் குவான் எங் வலியுறுத்தினார்.

கடந்த 2012-ஆம் மற்றும் 2013-ஆம் ஆண்டில், 1எம்டிபி நிறுவனத்தின் கடன் உத்தரவாதப் பத்திரங்களை (bonds) உயர்த்தியதற்காக, கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனத்திற்கு அத்தொகை வழங்கப் பட்டதாக லிம் குவான் எங் தெரிவித்தார்.

“ஆனால், அதனை செயல்படுத்தும் வேளையில், தனது நிறுவன ஊழியர்கள், சில சட்டங்களை மீறியுள்ளனர் என்று அந்நிறுவனத்தின் தலைமை செயல் நிலை நிர்வாகி ஒப்புக் கொண்டுள்ளார்” என்று குவான் எங் சுட்டிக் காட்டினார்.

தனது நிறுவன ஊழியர்கள் மட்டுமல்லாது, அந்நிறுவனத்தின் முக்கியத் தலைவர்களும் அந்தச் சட்ட மீறல் செயலில் ஈடுபட்டிருக்கலாம் என்றும் அவர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

1எம்டிபி பண ஊழல் விவகாரத்தில், கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனத்திற்கு சம்பந்தம் உண்டு என்பதை அந்நிறுவனமே ஒப்புக் கொண்டுள்ள வேளையில், அந்நிறுவனம் ஊதியமாக பெற்றுக் கொண்ட அந்தத் தொகையை திருப்பி தருவது தானே நியாயம் என்று நிதியமைச்சர் கேள்வி எழுப்பினார்.

அந்தத் தொகை திருப்பிக் கொடுக்கப் பட்டால், ரிம.1 ட்ரில்லியனாக உயர்ந்திருக்கும் மலேசிய நாட்டின் கடனை திருப்பி அடைக்க அரசாங்கத்திற்கு என்று அவர் குறிப்பிட்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker