Latestஇந்தியா

விஜய் அரசியலுக்கு வருவார்! -பழ கருப்பையா

சென்னை, நவ. 8- ‘சர்கார்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள பழ.கருப்பையா, விஜய் நிச்சயம் அரசியலுக்கு வருவார் என்று கூறியிருக்கிறார்.

சர்கார் பட பிரச்சனை பற்றி முன்னாள் எம்.எல்.ஏவும் நடிகருமான பழ.கருப்பையா கூறியதாவது:- ஒரு படம் தணிக்கை குழு அனுமதித்து வெளிவந்து விட்ட பிறகு ஒவ்வொருவரும் ‘இதை நீக்கு. அதை நீக்கு’ என்று சொன்னால் தணிக்கை குழுவுக்கு வேலையே இல்லை.

இத்தனை பேரிடம் ஓட்டெடுப்பு நடத்தி படத்தை வெளியிட முடியாது அதற்கென்று ஒரு குழு இருக்கிறது . அந்தக் குழு இதை அனுமதித்து இருக்கிறது. நான் பல சமயங்களில் பேசிய வசனங்கள் அதில் ‘மியூட்’ செய்யப்பட்டுள்ளன. எனது குரல் ஒடுக்கப்பட்டுள்ளது. வெறும் வாய் மட்டும் அசையும் நிலை. . தணிக்கை அனுமதித்த பிறகு இதை நீக்கு-அதை நீக்கு என்று ஒவ்வொரு வசனத்தையும் நீக்கு என்று சொல்லாதீர்கள்.

நீக்கு என்று சொன்னால் ஒவ்வொரு வசனத்தையும் நீக்கிக் கொண்டிருக்க முடியாது. இலவசத்தின் மூலம் தான் நடத்துகிறீர்கள். கமிஷன் வாங்காத ஊழல் செய்யாத துறை என்று ஒரு துறையுமே கிடையாது. நாட்டிலே மணலை இறக்குமதி செய்யக்கூடிய அளவுக்கு நீங்கள் கொண்டு வந்து விட்டீர்கள்.

நடிகர் விஜய் நிச்சயமாக அரசியலுக்கு வருவார். இது என்னுடைய கருத்து. இந்தப் படம் முழுவதும் அவருடன் பழகுகின்ற வாய்ப்பு எனக்கு கிடைத்தது. தனக்கு அளப்பரிய அன்பு செலுத்துகின்ற இந்த சமூகத்துக்கு நாம் ஏதாவது செய்ய வேண்டும் என்று என்னிடம் சொன்னார். அதனால் இப்போது வருவாரா என்று எனக்கு தெரியாது.

அவருக்கு திரையுலகில் பெரிய வரவேற்பு இருக்கிறது. பெரிய வலிமையான வயது இருக்கிறது. 40 வயதில் 20 வயது பையன் போல இருக்கிறார். ரொம்ப ஆபூர்வமான உடல் அமைப்பு. இதனால் அதையெல்லாம் விட்டு விட்டு இப்போது அரசியலுக்கு வருவாரா என்று எனக்கு தெரியாதே தவிர அவர் உறுதியாக அரசியலுக்கு வருவார். இவ்வாறு அவர் கூறினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker