Latestமலேசியா

1எம்டிபியுடன் சிங்கை பிரதமருக்கு தொடர்பா? பொய்! அவதூறு! – தூதரகம் மறுப்பு

கோலாலம்பூர், நவ.8- 1எம்டிபி ஊழல் விவகாரத்துடன் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூனை இணைத்து செய்தி வெளியிட்டுள்ள ‘தி கவரேஜ்’ எனப்படும் சமூக வலைத்தள செய்தித் தளத்தை இங்குள்ள சிங்கப்பூர் தூதரகம் சாடியுள்ளது.

“அந்தச் செய்தி தளத்தில் வெளியிடப் பட்டுள்ள செய்தியில் உண்மை இல்லை. அது ஒரு பொயச் செய்தி. பிரதமர் குறித்து அவதூறு பரப்பும் நோக்கில், அந்தச் செய்தி வெளியிடப் பட்டுள்ளது” என்று சிங்கப்பூர் தூதரகம் அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளது.

“முக்கியச் செய்தி: 1எம்டிபி ஊழல் விவகாரம் தொடர்பில் லீ சியன் லூனிடம் விசாரணை-பண ஊழலை மறைப்பதற்காக, நஜிப் லீயுடன் பல நியாயமற்ற ஒப்பந்தங்களை கையெழுத்திட்டுள்ளார்” என்ற தலைப்பில் அந்த செய்தித் தளம் செய்திகளை வெளியிட்டுள்ளது.

‘ஸ்டேட்ஸ் டைம்ஸ் ரிவீயூ’ என்ற வலைத்தளத்தில் வெளியிடப் பட்ட செய்தியை தளமாகக் கொண்டுதான் ‘தி கவரேஜ்’ பிரதமர் லீ குறித்து அவ்வாறு செய்தி வெளியிட்டுள்ளது.

சிங்கப்பூரின் புதிய தணிக்கை சட்டத்தால் பாதிக்கப் பட்டு, தற்போது வலைத்தள பக்கமாக ஸ்டேட்ஸ் டைம்ஸ் செயலாற்றி வருவதாக, அந்தப் பக்கத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

1எம்டிபி ஊழல் விவகாரம் தொடர்பில், சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்ட முதல் நாடு சிங்கப்பூராகும்.

2015-ஆம் ஆண்டில், 1எம்டிபி நிறுவனத்தில் ஊழல் நிகழ்ந்துள்ளதாக கூறப்பட்டதை தொடர்ந்து, அந்நிறுவனத்தின் மீது விசாரணை தொடங்கப் பட்டதும், அந்த ஊழலுக்கு துணை போனதாக நம்பப்படும் 8 வங்கிகளுக்கு சிங்கப்பூர் அரசாங்கம் அபராதம் விதித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker