Latestமலேசியா

11 வயது சிறுமியிடம் பாலியல் பலாத்காரம்: கிராப் ஓட்டுனர் மீது குற்றச்சாட்டு!

ஜார்ஜ்டவுன், நவ. 8- மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் 11 வயது சிறுமியை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தியதாக தம் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை 49 வயதுடைய கிராப் கார் ஓட்டுனர் ஒருவர் மறுத்தார்.

தற்போது அந்தச் சிறுமிக்கு 14 வயதாகிறது. தே கிம் ஹுவாட் என்ற அந்தக் கிராப் கார் ஓட்டுனர், கடந்த 2015 ஆம் ஆண்டில் பாயான் லெப்பாஸ், சுங்கை ஆராவில், ஜாலான் கெடிடியிலுள்ள வீடு ஒன்றில் இக்குற்றத்தைப் புரிந்ததாக இங்குள்ள செசன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.

குற்றவியல் சட்டத்தின் 376 (1) ஆவது பிரிவின் கீழ் குற்றச்சாட்டை எதிர்நோக்கியிருக்கும் இவர், குற்றவாளி என்பது நிருபிக்கப்பட்டால், 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை மற்றும் பிரம்படித் தண்டனை விதிக்கப்படும்.

தமக்கு இரண்டு பிள்ளைகள் இருப்பதால் ஜாமீன் அனுமதி அளிக்கப்படவேண்டும் என்று அந்த நபர் நீதிபதி வான் அஷிமா யாக்கோப் முன்னிலை கோரிக்கை விடுத்தார்.

பின்னர் இந்த நபருக்கு 10 ஆயிரம் ரிங்கிட் ரொக்கத்தில் ஒரு நபர் உத்தரவாதத்தின் பேரில் ஜாமீன் அனுமதிக்கப்பட்டது. இந்த வழக்கு டிசம்பர் 20 ஆம் தேதி விசாரணைக்கு வரும்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker