Latestமலேசியா

அண்டை வீட்டுக்காரரை பாராங் கத்தியால் ஆசாமி கைது!

கோலாலம்பூர், நவ.9- அண்டை வீட்டுக்காரர் ஒருவரை தாறுமாறாக தாக்கியதோடு வெட்டுக் கத்தியால் வெட்டியதாக நம்பப்படும் 41 வயதுடைய நபர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

தம்முடைய வீட்டின் முன்புறம் தம்முடைய கணவர் அந்த அண்டை வீட்டுக்காரால் மிக மோசமாக தாக்கப்பட்டதாக பெண்மணி ஒருவர், போலீஸில் புகார் செய்ததை அடுத்து அந்த நபர் கைது செய்யப்பட்டார் என்று அம்பாங் ஜெயா ஓசிபிடி ஹம்சா அலியாஸ் தெரிவித்தார்.

பெர்சியாரான் அம்பாங் சாவ்ஜானா என்ற இடத்திலுள்ள தமது வீட்டினுள் தாம் இருந்த போது திடிரென வீட்டுக்கு வெளியே இருந்து சத்தம் கேட்டதைத் தொடர்ந்து தாம் ஓடிச் சென்று பார்த்த போது தமது கணவர் இரத்தக் காயத்துடன் இருந்ததைக் கண்டதாக அந்தப் பெண்மணி சொன்னார்.

வலது கையிலும் தலையிலும் வெட்டுக்காயங்களுக்கு உள்ளாகி நிலையில், தமது வீட்டின் எதிர்புறம் உள்ள வீட்டுக்காரர் தம்மை வெட்டியதாக கணவர் தம்மிடம் கூறினார் என்று அவர் தெரிவித்தார்.

இந்தப் புகார் தொடர்பில் அண்டை வீட்டுக்காரரை கைது செய்ததோடு ஒரு பாராங்கத்தி மற்றும் இரண்டு கத்திகளையும் தாங்கள் கைப்பற்றி இருப்பதாக ஓசிபிடி ஹம்சா அலியாஸ் சொன்னார்.

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker