Latestசினிமா

அரசியலில் கமலுடன் கைகோர்க்கும் நடிகர் விஜய்?

சென்னை, நவ.9 -நடிகர் கமல்ஹாசன் மற்றும் விஜய் ஆகியோர் இணைந்து ஓரணியில் அரசியலில் களமிறங்க வாய்ப்புள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

நடிகர் விஜய் அரசியலுக்கு வரும் ஆசையை வெளிப்படுத்தி தான் சமீபகாலமாக பேசி வருகிறார். சர்கார் இசை வெளியீட்டு விழா பேச்சு அதில் சேர்ந்தது தான். பழ கருப்பையாவும் கூட விஜய் அரசியலுக்கு வர ஆசைப்படுவதாகத் தான் கூறியுள்ளார்.

இந்நிலையில் அரசை தாக்கும் சர்ச்சைக்குரிய காட்சிகள் படத்தில் இருப்பதாக அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இந்நிலையில் சர்கார் திரைப்படத்திற்கும் நடிகர் விஜய்க்கும் ஆதரவு தெரிவித்துள்ளார் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன்.

சர்கார் படத்தில் கூட வேட்பாளர்களை தேர்வு செய்ய விஜய் காட்டும் அணுகுமுறையைத் தான் கமல்ஹாசன் தனது மக்கள் நீதிமன்றத்தில் ஏற்கனவே செய்து வருகிறார்.

எனவே, லோக்சபா தேர்தலுக்குள் அரசியலில் குதிக்க விஜய் முடிவெடுத்தால் அவர் கமல்ஹாசன் கட்சியுடன் இணைந்து செயல்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

அதற்குள்ளாக கட்சியைத் தயார் செய்வது கடினம் என்பதால் குறைந்த பட்சம் கமலுக்கு ஆதரவாக தேர்தலின் போது விஜய் பக்கபலமாக இருக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker