Latestஉலகம்

இசை விடுதியில் துப்பாக்கிச் சூடு! 12 பேர் பலி! அதிபர் டிரம்ப் அதிர்ச்சி!

லாஸ் ஏஞ்சல்ஸ், நவ.9- அமெரிக்க இசை விடுதி ஒன்றில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியாயினர். அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்பட பல முக்கிய தலைவர்கள் இந்தத் தாக்குதல் குறித்து அதிர்ச்சி தெரிவித்தனர்.

கலிபோர்னியாவிலுள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து 40 மைல் தொலைவில் உள்ள தசவண்ட் ஓக்ஸ் நகரில் ஓர் இசை விடுதி இயங்கி வருகிறது. அங்கே கல்லூரி மாணவர்களுக்கான இசை நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இதில் இளைய தலைமுறையினர் திரளாக கலந்து கொண்டனர்.

இந்நிலையில் இரவு சுமார் 11.40 மணிக்கு கையில் துப்பாக்கியுடன் வந்த மர்ம நபர் அங்கு உள்ளவர்களை நோக்கி சரமாரியாக சுடத் தொடங்கினான். இதனால் அங்கு பெரும் அமளி ஏற்பட்டது.

அப்போது அந்த நபர் பலரை சுட்டு வீழ்த்தி விட்டான். இதில் 12 பேர் உயிரிழந்தனர். அவர்களில் ஒருவர் போலீஸ் அதிகாரி ஆவார். 12 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு ஆம்புலன்சுகளில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் இறந்த கிடந்தது தெரிய வந்தது. அவர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என தெரியவில்லை.
இது பயங்கவாத தாக்குதலா? என்பதுவும் உடனடியாக தெரிய வரவில்லை.

அந்தத் துப்பாக்கிக்காரன் முன்னாள் இராணுவ வீரனான டேவிட் லோங்  என்றும் ஆப்கான் போரில் பங்கேற்றவன் என்றும் தெரிய வந்துள்ளது. இச்சம்பவம் அமெரிக்காவை பதற்றத்துக்கு உள்ளாக்கி இருக்கிறது. இத்தாக்குதல் குறித்து அதிபர் டிரம்ப்க்கு உயர் அதிகாரிகள் விளக்கினர். பலியானவர்களுக்கு அவர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker