Latestமலேசியா

இந்தியர்கள் மீதான கருத்தரங்கு: சர்ச்சையால் யு.கே.எம். ரத்து செய்தது!

கோலாலம்பூர், நவ.9- மலேசிய தேசிய பல்கலைக் கழகத்தில் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த மலேசிய இந்தியர்கள் தொடர்பான கருத்தரங்கு, சர்ச்சைகள் காரணமாக ரத்து செய்யப்பட்டது.

இந்தியர்கள் மலாயாவுக்கு குடிபெயந்தது தொடர்பில் நடைபெறவிருந்த இந்தக் கருத்தரங்கு குறித்து சமூக வலைதளங்களில் மிகக் கடுமையான விமர்சனங்கள் வெடித்துக் கிளம்பியதால் இறுதியில் அது ரத்து செய்யப்பட்டுள்ளது.

மலேசிய தேசிய பல்கலைக் கழகத்தின் (யு.கே.எம்.) மலாய் உலகம் மற்றும் அதன் நாகரீகம் தொடர்பான கல்விக் கழகம் தாங்கள் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கு நிறுத்தப்பட்டு விட்டதாக அறிவித்திருக்கிறது. “Polemik Kehadiran Masyarakat India di Semenanjung Tanah Melayu: Migrasi atau Imigran” என்ற தலைப்பில் இந்தக் கருத்தரங்கு நடைபெறவிருந்தது.

இந்தக் கருத்தரங்கில் உள்நாட்டுப் பல்கலைக் கழகங்களைச் சேர்ந்த 4 கல்வியாளர்கள் தங்களின் கருத்துக்களை சமர்ப்பிக்கவிருந்தனர். தற்போது இது ரத்து செய்ததற்கான காரணம் எதனையும் அந்த அமைப்பு விளக்கவில்லை.

இந்தக் கருத்தரங்கு குறித்து சமூக ஊடகங்களில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் சிறுபான்மையினர் உரிமை செயல் கட்சியான ‘மிரா’ துணைத்தலைவர் கோபி கிருஷ்ணா இதற்கு கண்டன்ம் தெரிவித்திருந்தார்.

தீபகற்ப மலேசியாவில் இந்திய சமுதாயத்தின் தோற்றம் குறித்து கேள்வி எழுப்பும் வகையில் கருத்தரங்கு, புகழ்பெற்ற யு.கே.எம். மில் நடத்தப்படுவதானது பெருமேமாற்றம் தருவதாக அமைந்துள்ளது என்று அவர் சொன்னார்.

புதிய மலேசியாவில் இருக்கும் நாம், இத்தகைய இனவாதமான தலைப்புகளில் கருத்தரங்குகள் நடத்துவதைக் கைவிடவேண்டும்> எதற்காக இத்தகைய சர்ச்சைக்குரிய தலைப்புகளை பல்கலைக்கழகம் அனுமதித்தது என்பது குறித்தும் விளக்க வேண்டும் என்றார் அவர்.

அதேவேளையில் இந்தக் கருத்தரங்கில் விவாதிக்கவிருந்த கல்வியாளர்களில் பிற இனக் கல்வியாளர்கள் முற்றாக இல்லாமல் போனது ஏன் என்று கோபி கிருஷ்னா கேள்வி எழுப்பினார். இது குறித்து கல்வி அமைச்சர் மஸ்லி மாலிக்கும் ஒற்றுமைத்துறை அமைச்சர் வேத மூர்த்தியும் கவனத்தில் கொள்ளவேண்டியது அவசியம் என்று அவர் கூறினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker