Latestமலேசியா

சலவை இயந்திரத்தினுள் 3 வயது குழந்தை: குற்றத்தை ஒப்பிய நபருக்கு 2 மாதச் சிறை!

கோலக் குபுபாரு, நவ.9- தன்னுடைய சகோதரியின் 3 வயதுக் குழந்தையைச் சலவை நிலையத்திலுள்ள துணி துவைக்கும் இயந்திரத்தினுள் இருத்தி வைத்த குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட 27 வயதுடைய நபர் ஒருவருக்கு இங்குள்ள செசன்ஸ் நீதிமன்றத்தில் இரண்டு மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

ரவாங், புக்கிட் செந்தோசாவிலுள்ள சலவை நிலையம் ஒன்றில் கடந்த அக்டோபர் 2ஆம் தேதியன்று இந்தச் சம்பவம் நடந்தது.

குழந்தையின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதாக முகம்மட் இர்வான் என்ற அந்த நபர் மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.

கடந்த அக்டோபர் 9ஆம் தேதி இவர் மீது குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்ட போது அவர் அதனை ஒப்புக்கொள்ள மறுத்தார். எனினும் இன்று அந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது தமது முடிவை மாற்றிக் கொண்டு குற்றச்சாட்டை அவர் ஒப்புக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் கடந்த அக்டோபர் 3ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இவருக்கான இரண்டு மாதத் தண்டனைக் காலம், கைது செய்யப்பட்ட நாளில் இருந்து தொடங்குகிறது.

முகம்மட் இர்வானின் செயல் அந்தக் குழந்தையின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தி இருக்கக்கூடும் என்று நீதிபதி அஸ்மில் முஸ்தாபா குறிப்பிட்டார்.

மேலும் ‘உன்னுடைய செயலுக்காக உனது சகோதரியிடம் மன்னிப்புக் கேட்டாயா?’ என்று இர்வானிடம் நீதிபதி கேட்ட போது மன்னிப்புக் கேட்டுக் கொண்டதாக அவர் தெரிவித்தார்.

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker