Latestமலேசியா

சிறுமி மானபங்கம்: முன்னாள் அமைச்சர் ஷாகிடானை கைது செய்ய உத்தரவு!

கங்கார், நவ. 9- ஒரு சிறுமியின் மானபங்கம் சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்திற்கு வரத் தவறிய முன்னாள் அமைச்சர் டத்தோஶ்ரீ ஷாகிடான் காசிமிற்கு எதிராக கங்கார் செசன்ஸ் நீதிமன்றம் கைது உத்தரவை பிறப்பித்துள்ளது.

அவருக்கு எதிராக கைது உத்தரவு பிறப்பிக்கப் படவேண்டும் என்று துணை அரசு வழக்கறிஞர் முகம்மட் நோர்டின் செய்து கொண்ட மனுவின் அடிப்படையில் ஷாகிடானை கைது செய்ய நீதிபதி ஜொகாரி அபு ஹசான் உத்தரவைப் பிறப்பித்தார்.

நீதிமன்றத்தில் ஆஜாராவது தொடர்பில் தமக்கோ தமது கட்சிக்காரர் ஷாகிடானுக்கோ முன்கூட்டியே தெரிவிக்கப் படவில்லை என்று ஷாகிடானின் வழக்கறிஞர் சையட் முகம்மட் அன்வார் குறிப்பிட்டார். எனவே ஷாகிடானுக்கு எதிராக கைது ஆணை பிறக்கப்படுவதற்கு அவர் ஆட்சேபம் தெரிவித்தார்.

தற்போது ஷாகிடான் நாட்டில் இல்லை என்றும் நீதிமன்றம் வந்த பின்னர் தான் இது பற்றி தமக்குத் தெரியும் என்றும் அவர் சொன்னார்.

மேலும், இந்தக் கைது உத்தரவை ரத்து செய்யக் கோரும் மனுவை தாம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய விருப்பதாகவும் அவர் கூறினார்.

15 வயது நிரம்பிய சிறுமியை மானபங்கம் செய்ததாகவும் இச்சம்பவம் கடந்த அக்டோபர் 21ஆம் தேதி நடந்ததாகவும் சமூக ஊடகங்களில் தகவல் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இது குறித்து செய்யப்பட்ட போலீஸ் புகார் ஒன்றும் பின்னர் வாபஸ் பெறப்பட்டுள்ளது. அதேவேளையில் தம் மீதான புகாரை ஷாகிடான் மறுத்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker