Latestமலேசியா

தீபாவளியை முன்னிட்டு காமக் களியாட்ட விருந்து! 45 பேர் பிடிபட்டனர்!

செர்டாங், நவ.9- தீபாவளியை முன்னிட்டு நடத்தப்பட்ட போதைப்பொருள் மற்றும் காமக் களியாட்ட விருந்து நிகழ்ச்சி ஒன்று தொடர்பாக போலீசார் 45 இளைஞர்களைக் கைது செய்துள்ளனர்.

தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து கோலாலம்பூர், ஶ்ரீகெம்பாங்கானிலுள்ள ஆடம்பர அடுக்கு மாடி வீடு ஒன்றில் அதிரடிச் சோதனை நடத்திய போலீசார் அதிகாலை 3.45 மணியளவில் இவர்களைக் கைது செய்தனர்.

கிட்டத்தட்ட 14 வயது முதல் 26 வயதுக்கு உட்பட்ட 45 பேர் கைதான வேளையில் அங்கிருந்து போதைப் பொருள்களும் கைப்பற்றப்பட்டதாக செர்டாங் ஓசிபிடி இஸ்மாயில் பொர்ஹான் தெரிவித்தார்.

இவர்களில் 33 இளைஞர்கள் கஞ்சா மற்றும் சயாபு வகை போதை அருந்தி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது என்று அவர் சொன்னர். இந்த விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்த முக்கிய நபர்களும் கைது செய்யப்பட்டனர்.

இந்த விருந்தில் கலந்து கொள்பவர்கள் கட்டணமாக 60 ரிங்கிட் செலுத்த வேண்டும். அதே வேளையில் போதை வேண்டுமானால் அதற்கு தனியாக கட்டணம் செலுத்த வேண்டும் என்று விசாரணையில் இருந்து தெரிய வந்திருப்பதாக ஓசிபிடி பொர்ஹான் சொன்னார்.

இவர்கள் போதைப்பொருள் புழக்கத்தோடு செக்ஸ் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளனர் என கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. பிடிபட்டவர்களில் 9 பேர் இடைநிலைப்பள்ளி மாணாக்கர்கள் என்று அவர் கூறினார்.

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker