Latest

பிகேஆர் தேர்தல் முறைகேடு; பின்னணி யார்? விசாரிக்குமா எம்.ஏ.சி.சி? -அஸ்மின்

கூச்சிங், நவ.9- பிகேஆர் கட்சித் தேர்தல் இவ்வாரம் ஒரு நிறைவுக்கு வரவிருப்பதை தொடர்ந்து, அக்கட்சி தேர்தலின் போது பல முறைகேடுகள் மற்றும் பண அரசியல் நடந்ததால், அதன் பின்னணியில் செயல்பட்டது யார் என்பதை எம்.ஏ.சி.சி கண்டு பிடிக்க வேண்டும் என்று பிகேஆர் கட்சியின் தற்போதைய துணைத் தலைவர் டத்தோஶ்ரீ அஸ்மின் அலி கோரிக்கை விடுத்தார்.

அதன் தொடர்பில், மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையம், சிலரிடம் விசாரணைகள் மற்றும் கேள்விகளை எழுப்பி வருவதை பாராட்டிய அவர், அந்த ஆணையம் அந்த முயற்சிகளை கைவிட்டு விடக் கூடாது என்றும் கேட்டுக் கொண்டார்.

“இதில் சம்பந்தப் பட்டவர்கள் யார் என்பதை மட்டும் எம்.ஏ.சி.சி அலசி ஆராயக் கூடாது. அதன் பின்னணியில் செயல்பட்ட ‘சூத்திரதாரி’ யார் என்பதையும் அந்த ஆணையம் கண்டறிய வேண்டும். அந்தச் சூத்திரதாரி மீது நடவடிக்கை எடுக்கப் பட வேண்டும்” என்று அவர் நினைவூட்டினார்.

ஜூலாவ் பிகேஆர் கட்சிக் கிளையில், உறுப்பினர்களின் எண்ணிக்கை திடீரென்று அதிகரிக்கப் பட்டதை தொடர்ந்து, அங்கு பண அரசியல் நடைபெற்றிருக்கக் கூடும் என்ற அடிப்படையில், எம்.ஏ.சி.சி சிலரிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறது என்று கூறப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் மாதம் 26-ஆம் தேதியன்று, அக்கிளை உறுப்பினர்களின் எண்ணிக்கை 603-ஆக இருந்ததாகவும், ஒரே நாளில், அந்தக் கிளை உறுப்பினர்களின் எண்ணிக்கை 13,000-ஆக உயர்ந்தது என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker