Latestமலேசியா

பினாங்கு அரசு ஊழியர்களுக்கு அரை மாத போனஸ்!

ஜோர்ஜ் டவுன்,நவ.9- பினாங்கு அரசு ஊழியர்களுக்கு இறுதியாண்டு போனஸாக அரை மாதம் சம்பளம் அல்லது குறைந்தது 1000 ரிங்கிட் வழங்க அம்மாநில அரசு இணக்கம் தெரிவித்துள்ளது.

இன்று சட்டமன்றக் கூட்டத்தின்போது பினாங்கு முதல்வர் சாவ் கோன் இயாவ் இதனை அறிவித்தார்.

அம்மாநிலத்திலுள்ள 3,915 அரசு பணியாளர்களுக்கு இறுதியாண்டு போனஸ் தொகை வழங்க 5.23 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.

அரசு ஊழியர்களின் சேவையைப் போற்றும் வகையில் போனஸ் வழங்கப்படுகிறது. அடுத்த மாதம் இந்த போனஸ் தொகை அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker