Latestமலேசியா

மனைவியின் அறுவை சிகிச்சைக்கு பணம் கட்ட மோட்டார் சைக்கிள் திருடிய ஆடவன்!

குவாந்தான்,நவ.9- மனைவியின் அறுவை சிகிச்சைக்கு பணம் செலுத்துவதற்காக மோட்டார் சைக்கிளைத் திருடிய ஆடவனுக்கு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் ஓராண்டு சிறைத் தண்டனை விதித்தது.

27 வயதான ராஜா சட்டாம் ஷா தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து மாஜிஸ்திரேட் நோர் அய்ஷா அவனுக்கு அத்தண்டனையை விதித்தார்.

கடந்த அக்டோபர் முதலாம் தேதியன்று, கம்போங் ஶ்ரீ மக்கோத்தா பத்துவில், ராஜா சட்டாம், சூல் சைடி என்பவரின் ஹோண்டா ஈஎக்ஸ்5 மோட்டார் சைக்கிளைக் கொள்ளையடித்தாக குற்றஞ்சாட்டப்பட்டது.

உண்மையில், அந்த குற்றத்திற்கு அதிகபட்சம் ஏழாண்டு சிறையும் அபராதமும் விதிக்கப்பட்டிருக்க வேண்டும்.

தனது சார்பில் வழக்கறிஞர் வைத்துக் கொள்ளாத ராஜா சாட்டாம் நோய்வாய்ப்பட்டிருக்கும் தனது மனைவிக்காகத்தான் மோட்டார் சைக்கிளைத் திருடியதாக நீதிமன்றத்தில் கண்ணீர் மல்கக் கூறினான் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker