Latestஉலகம்

கலிபோர்னியாவை கலங்கடித்த காட்டுத் தீ! 10 பேர் பலி! மக்கள் பதறி ஓட்டம்!

லாஸ் ஏஞ்சலிஸ், நவ.10- அமெரிக்காவின் வட கலிபோர்னியாவில் காட்டுத்தீ வேகமாக பரவி வரும் நிலையில் 1 லட்சத்து 50 ஆயிரம் பேர்  வீடுகளைக் காலி செய்து விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு சென்றனர். இதுவரை இந்தக் காட்டுத் தீயிக்கு 10 பேர் பலியாகி உள்ளனர்.

வட கலிபோர்னியாவின், கேம்ப் கிரீக் என்ற இடத்தில் தொடங்கிய இந்தக் காட்டுத் தீயானது தொடர்ந்து வரவி வருகிறது. மணிக்கு 50 மைல் வேகத்தில் பலத்த காற்று வீசுவதால் அந்த பகுதிப் முழுவதும் தீயும் புகை மண்டலமாகவும் மாறி வருகிறது.

இந்தக் காட்டுத் தீ திடீரென பரவியதால் பலர் வாகனங்களைச் சாலையில் அப்படியே விட்டு விட்டு ஓட்டம் பிடித்ததாக தகவல்கள் கூறுகின்றன. பல வீடுகள் தீக்கிரையாகி விட்டதாகவும் சொல்லப்படுகிறது.

தீப் பரவி வருகிற பகுதிகளில் குடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் வீடுகளை காலி செய்துள்ளனர். அங்கு பாரடைஸ், மகாலியா, கான்கவ், பட்டி கிரீக் ஆகிய பகுதிகளிலுள்ள மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு சென்று விடுமாறு அரசு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

பள்ளிகள் -மருத்துவமனைகளில் இருந்தவர்கள் எல்லோரும் வெளியேற்றப் பட்டுள்ளனர். இந்தக் காட்டுத் தீயில் சிக்கி பலர் காயமடைந்துள்ளனர். இவர்களில் தீயணைப்பு வீரர்களும் அடங்குவர். தீயை அணைப்பதற்கு நூற்றுக்கணக்கான வீரர்கள் போராடி வருகின்றன. மின் இணைப்பு துண்டிக்கப் பட்டுள்ளதால் பெரும் பகுதி மக்கள் மின்சாரம் இன்றி தவிக்கின்றனர்.

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker