Latestசினிமா

யார் அந்த கோமளவள்ளி? கூகுளை திணற வைத்த தமிழர்கள்!

சென்னை, நவ.10- வலைதளத்தில் வலம் வரும் நெட்டிசன்களை நெருட வைத்த அந்த கோமளவள்ளி யார்? அந்த கதாபாத்திரம் யாருடையது?

ஏ.ஆர் முருகதாஸ் இயக்கி, நடிகர் விஜய் மற்றும் நடிகை வரலட்சுமி நடித்து தீபாவளியன்று வெளியான சர்கார் படத்தில் வரும் கோமளவள்ளி கதாபாத்திரத்தினால் தமிழகத்தில் கொந்தளிப்பு ஏற்பட்டிருக்கிறது.

இந்தப் படம் வெளியானது முதல் பல்வேறு பிரச்சினைகளை கிளப்பி வருகின்றனர் ஆளும் கட்சியினர். இந்நிலையில் இந்த படத்தில் நடிகை வரலட்சுமி, கதாபாத்திரத்தின் பெயர் கோமளவள்ளி எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

மிகவும் துணிச்சலாக பெண் அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வரலட்சுமி, ஜெயலலிதாவை பிரதிபலிப்பதாக சர்ச்சைகள் வெடித்தன.

மேலும் படத்தில் அவருக்கு கொடுக்கப் பட்டிருக்கும் பெயரான கோமளவள்ளி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இயற்பெயர் என்ற தகவல்களும் கசிந்தன. ஆனால் இதில் எந்த அளவு உண்மை உள்ளது என்று தெரியவில்லை.

அதே நேரத்தில் கோமளவள்ளி ஜெயலலிதாவின் பெயரே அல்ல என்று அதிமுக கட்சியின் தலைவர் டிடிவி தினகரன் கருத்து தெரிவித்து உள்ளார்.

இது ஒருபுறம் இருக்க, நாங்கள் கூகுளை கேட்டுத் தெரிந்து கொள்கிறோம் என்று படையெடுத்துச் சென்ற நெட்டிசன்கள் கூகுளையே திணற வைத்து கோமளவள்ளி யார் என தேடியுள்ளனர்.

ஜெயலலிதாவின் இயற்பெயர் என்ன? கோமளவள்ளி அர்த்தம் என்ன போன்ற பல கேள்விகள் கூகுளை மடக்கியது. இதன் காரணமாக கூகுள் டிரெண்ட்டில் கோமளவள்ளி தொடர்ந்து அதிக அளவில் தேடப்பட்டவராக விளங்குகிறார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker