Latestஉலகம்

கழிவறைக்குச் சென்ற நபரின் மர்ம உறுப்பை கடித்த பாம்பு

பேங்காக், நவ. 11- தாய்லாந்தில் கழிவறைக்கு சென்ற இளைஞர் ஒருவரின் மர்ம உறுப்பை பாம்பு கடித்ததால் அந்நபர் அவசர அவசரமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று தற்போது தேறி வருகிறார்.

பேங்காக்கைச் சேர்ந்தவர் தெர்சாக் கவிபாங்பான் ( வயது 45) இவர் கடந்த 8 ஆம் தேதி காலை தன்னுடைய அலுவலகத்தில் இருக்கும் கழிவறைக்கு சென்றுள்ளார்.

அப்போது கழிவறைக்குள் இருந்த 10 அடி நீளம் கொண்ட பாம்பு அவரின் மர்ம உறுப்பை கடித்துள்ளது. இதனால் வலியால் துடித்த அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப் பட்டுள்ளார்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவருடைய உயிருக்கு எந்தவொரு ஆபத்தும் இல்லை என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “நான் பாம்பு கடித்ததை உணர்ந்தேன். அதன் பின் உடனடியாக மருத்துவமனைக்கு வந்தேன். பாத்ரூம் செல்பவர்கள் இனி கவனமாக செல்ல வேண்டும். இது போன்று இருக்கும் நவீன கழிவறைக்குள் கூட பாம்புகள் ஒளிந்திருக்க வாய்ப்பு இருக்கிறது என எச்சரித்தார்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து மீட்புப் படையினருக்கு தகவல் தெரிவிக்கப் பட்டதால் அவர்கள் அடுத்த 30 நிமிடத்திற்குள் அங்கு விரைந்து பாம்பை பிடித்துச் சென்றுவிட்டதாக உள்ளூர் ஊடகம் தெரிவித்தது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker