Latestமலேசியா

டாய்ம் மீதான சாடல்: வாபஸ் பெற்றார் ஸைட் இப்ராகிம்! அரசியலுக்கும் முழுக்கு!

கோலாலம்பூர், நவ. 11- பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தின் முக்கிய முடிவுகளை துன் டாய்ம் ஜைனுடினும் அவரது கோடீஸ்வரக் கூட்டாளிகளும் தான் எடுக்கிறார்கள் என்று தனது சமூக ஊடகத்தில் எழுதியிருந்த முன்னாள் அமைச்சரும் அரசியல்வாதியுமான டத்தோ ஸைட் இப்ராகிம் தம்முடைய அந்தக் கருத்தை வாபஸ் பெற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளார்.

மேலும், கடந்த 9 ஆண்டுகளாக தனது சமூக ஊடகத்தில் எழுதி வந்த தாம் இனிமேல் எழுதுவதை நிறுத்திக்கொள்ளவும் ஒருவழியாக அரசியலை விட்டே ஒதுங்கவும் விரும்புவதாக ஒரு வழக்கறிஞருமான ஸைட் இப்ராகிம் தெரிவித்தார்.

தம்முடைய நியாயமற்ற கருத்துக்காக வருந்துவதாகவும் இதற்காக துன் டாய்ம் மற்றும் துன் மகாதீர் ஆகியோரிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்வதாகவும் அவர் சொன்னார்.

நிதியமைச்சர் லிம் குவான் எங் தம்மோடு தொடர்பு கொண்டு பேசியதாகவும் துன் டாய்ம் பற்றிய அந்தக் கருத்து அவசியமற்றது என்றும் உண்மைக்கு மாறானது என்றும் சுட்டிக் காட்டியதாகவும் ஜசெக உறுப்பினருமான ஸைட் இப்ராகிம் குறிப்பிட்டார்.

”தேவையில்லாமல் எனது கருத்து பலரை காயப்படுத்தி விடுகிறது. இது எனது நண்பர்களே கூட வருத்தப் படுகிறார்கள். என் குடும்பத்தினரும் வருத்தம் அடைகின்றனர். எனவே இதற்காக வருத்தப் படுகிறேன். இனி எழுதுவதை நிறுத்தி விட்டு அரசியலையும் ஒரு நன்மைக்காக துறக்கலாம் என்று இருக்கிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker