Latestமலேசியா

வாக்குறுதி எதற்கு? தூக்கி எறியுங்கள்! -பக்காத்தான் மீது நஜிப் தாக்கு!

கோலாலம்பூர், நவ. 11- பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் மேலுமொரு தேர்தல் வாக்குறுதியை கைவிட்டிருக்கிறது. இருக்கிற வாக்குறுதிகளையும் காப்பாற்றப்போவது போல இனியும் நடிப்பதை அது நிறுத்த வேண்டும் என்று முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் சாடினார்.

பிடிபிடிஎன் உயர்கல்வி கடனுதவித் திட்டம் தொடர்பான தனது வாக்குறுதியை நிறைவேற்ற இயலவில்லை என்பதை அதன் வாரியத் தலைவர் வான் சைபுல் அறிவித்து உள்ளார்.

கல்விக் கடன் பெற்றவர்கள் தங்களின் வேலையில் 4,000 ரிங்கிட் சம்பளத்தை எட்டும் வரையில் கல்விக் கடனை செலுத்த வேண்டியதில்லை என்ற தேர்தல் வாக்குறுதியை பக்காத்தான் ஹராப்பான் இப்போது கை விட்டுள்ளதை சுட்டிக்காட்டி தமது முகநூல் பதிவை வெளியிட்டுள்ளார் நஜிப்.

அதேவேளையில், பல்கலைக் கழகம் மற்றும் பல்கலைக் கழக கல்லூரிகள் சட்டத்தை அகற்றுவதாக வாக்குறுதி அளித்த பக்காத்தான் அரசாங்கம், இப்போது அந்தச் சட்டத்தில் திருத்தங்கள் மட்டும் செய்யப் போவதாக கல்வி அமைச்சர் மஸ்லீ மாலிக் தெரிவித்துள்ளார்.

மேலும் தேர்தல் வாக்குறுதியில் கூறியதற்கு மாறாக, நெடுஞ்சாலைக் கட்டணத்தை அகற்ற முடியாது என்றும் பக்காத்தான் அறிவித்துள்ளது.

இந்நிலையில் இது பற்றிக் கருத்துரைத்துள்ள நஜிப், ‘பக்காத்தான் ஹராப்பானின் தேர்தல் கொள்கை அறிக்கை இனி எதற்கு, தூக்கி எறிந்து விடலாமே” என்று அவர் கூறியுள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker