Latestமலேசியா

29 ஆதரவற்ற சிறுவர்கள் மானபங்கம்!

நவம்பர் 8-ஆம் தேதி, அந்த ஆதரவற்றோர் இல்லத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமி தான் தனது பராமரிப்பாளரால் மானபங்கம் செய்யப்பட்டதாக போலீசில் புகார் அளித்ததை அடுத்து அந்த இல்லத்தில் தமது தரப்பினர் அதிரடி சோதனை நடத்தியதாக பகாங் சமூகநலத் துறை இயக்குநர் சூல்கைரி சைனோல் அபிடின் தெரிவித்தார்.

அந்த சோதனை நடவடிக்கையில், அந்த ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்த எல்லா சிறுவர்களும் மானபங்கமும் கொடுமையும் செய்யப்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்பட்டது.

அதனால், அனைவரும் மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அந்த சிறுவர்கள் மானபங்கம் படுத்தப்பட்டது உறுதிப்படுத்தப்பட்டது.

சம்பந்தப்பட்ட ஆதரவற்றோர் இல்லத்தில் 7 சிறுமிகளும், 22 சிறுவர்களும் இருந்தார்கள். அவர்களில் இருவருக்கு குடும்பம் இல்லை. மற்றவர்களுக்கு குடும்பம் இருக்கிறது.

குடும்பம் இருக்கும் சிறுவர்கள் அவரவர் குடும்பத்திடமே ஒப்படைக்கப்பட்டு விட்டார்கள். குடும்பம் இல்லாத இரு சிறுவர்களை மட்டும் சமூகநலத் துறைப் பராமரிப்பில் வளர நீதிமன்றத்தில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker