Latestமலேசியா

அமைச்சரவையில் மாற்றமா? மறுக்கிறார் லிம் குவான் எங்!

கோலாலம்பூர், நவ.12- புதிய அமைச்சரவைப் பதவியேற்று 6 மாதங்களே ஆகவிருக்கும் நிலையில், விரைவில் மலேசிய அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படும் என்று வெளியாகி வரும் ஆரூடங்களை நிதியமைச்சர் லிம் குவான் எங் நிராகரித்தார்.

இத்தகைய மாற்றம் குறித்து தாம் எதுவும் கேள்விப்படவில்லை என்று அவர் சொன்னார். இந்தத் தகவல் வெறும் வதந்தியாகவோ, ஆரூடங்களாகவோ மட்டுமே இருக்கும் என்று குறிப்பிட்ட அவர், ஒருவேளை அந்தத் தகவலில் அடிப்படை இருக்குமானால், இறுதியாக, அதுபற்றி முடிவு எடுக்கக்கூடியவர் பிரதமர் தான் என்று லிம் குவான் எங் கூறினார்.

மலேசிய அமைச்சரவை 29 பேரை கொண்டு அமைக்கப்பட்டது. இதில் பலரும் அமைச்சர் பதவிக்கு புதுமுகங்களாவர். இவர்களில் பலர் அனுபவமின்மையால் குறைகூறலுக்கும் உள்ளாகி வருகின்றனர்.

“என்னைப் பொறுத்தவரையில் எனது சகாக்கள் சிறப்பாகவே பணியாற்றி வருகின்றனர். அமைச்சரவை என்பது முழுக்க பிரதமர் சம்பந்தப்படட்டது. நான் சம்பந்தப்பட்டது அல்ல’ என்று அவர் கூறினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker