Latestஇந்தியா

இந்திய அமைச்சர் ஆனந்தகுமார் காலமானார்!

பெங்களூரு, நவ.12- உடல்நலக் குறைவால் பெங்களூரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மத்திய அமைச்சர் அனந்தகுமார் காலமானார்.

மத்திய ப. ஜனதா அரசில் இரசாயனம் மற்றும உரம் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சராக இருந்தவர் அனந்தகுமார் (வயது 59). கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இவர், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பெங்களூரு தெற்கு தொகுதியில் போட்டியிட்டு எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அனந்தகுமார் புற்றுநோயால் அவதிப்பட்டார். அமெரிக்காவில் உள்ள மருத்துவனையில் சிகிச்சை பெற்ற பின்னர் உடல்நலம் சீரானது.

இந்நிலையில் மத்திய அமைச்சர் அனந்தகுமாருக்கு மீண்டும் உடல் நலக்குறைவு எற்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த அமைச்சர் அனந்தகுமார் அதிகாலை 2 மணியளவில் சிகிச்சைக்குப் பலனின்றி உயிர்நீத்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker