Latestமலேசியா

உணவகங்களில் புகைப் பிடிக்கத் தடையா? உணவக உரிமையாளர்கள் ஆட்சேபம்!

கோலாலம்பூர்,நவ.12- அடுத்தாண்டு முதல் உணவகங்களில் புகைப் பிடிக்கத் தடை விதிக்கும் அரசாங்கத்தின் முடிவுக்கு நாடு முழுவதுமுள்ள சீன, இந்திய, மாமாக் உணவகங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

உண்மையில் இத்தகைய விதிமுறைகளை பின்பற்றும் விருப்பத்தை உணவக உரிமையாளரிடமே விட்டுவிட வேண்டும் உணவக உரிமையாளர்கள் கருதுகின்றனர்.

தனது வாடிக்காளர்களில் புகைப் பிடிப்பவர்களும் உள்ளனர்; புகைப் பிடிக்காதவர்கள் உள்ளனர் என மலேசிய-சிங்கப்பூர் தேநீர் கடை உரிமையாளர் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

“அரசாங்கம் எங்கள் கடையை நடத்தவில்லை. அதனால், இந்த விவகாரத்தின் நாங்கள் தானே முடிவெடுக்க வேண்டும். இது ஏற்புடைய காரியம் அல்ல. மக்களிடையே புகைப் பிடிக்கும் பழக்கத்தை குறைக்க அரசாங்கம் வேறு வழியைக் கையாள வேண்டும்”என்று அந்த தேநீர் கடை உரிமையாளர் சங்கத் தலைவர் ஹோ சு மொங் தெரிவித்தார்.

“உணவகத் தொழில் நடத்துவது அத்தனை எளிதல்ல. அதனால், அரசாங்கம் எதையும் ஆராய்ந்து முடிவு எடுக்க வேண்டும்” என்றார் அவர்.

இதனிடையே, அரசாங்கத்தின் இந்த புதிய விதிமுறையை மறுஆய்வு செய்யுமாறு மலேசிய இந்திய உணவக உரிமையாளர் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. உணவகத்தில் புகைப் பிடிக்கத் தடை விதிப்பது வியாபாரத்தை பாதிக்கும் என அச்சங்கத்தின் தலைவர் தி.முத்துசாமி குறிப்பிட்டுள்ளார்.

உணவகத்திலிருந்து 10 அடி தள்ளி நின்று புகைப் பிடிக்கலாம் என அரசாங்கம் கூறியுள்ளது. உணவகத்திற்கு வரும் வாடிக்கையாளர் அவ்வளவு தூரம் சென்று புகைப் பிடிப்பது அவர்களைச் சிறுமைப்படுத்துவது போல் இருக்காதா என்று மலேசிய முஸ்லில்ம் உணவக உரிமையாளர் சங்கத் தலைவர் ஆயூப் கானும் கேள்வி எழுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker