
பாங்கி,நவ.12- முதலாம் வகுப்பு முதல் ஆறாம் படிவம் வரையில் ஒரே பள்ளியில் கல்வி கற்ற கிரி ராஜ்-ஹரி ராஜ் இரட்டையருக்கு சொல்லி வைத்தாற்போல ஒரே பல்கலைக்கழகம் கிடைத்தது. அதுமட்டுமின்றி, ஒரே துறையில் படித்து முடிந்து இன்று அவ்விருவரும் ஒரே மேடையில் பட்டதாரிகளாக பட்டம் பெற்றுள்ளனர்.
ஆறாம் படிவம் முடிந்ததும் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்கையில் எந்தெந்தப் பல்கலைக்கழகத்திற்கு என்னென்ன துறைக்கு விண்ணப்பித்திருந்தார்கள் என்று இருவருக்குமே தெரியாதாம்.
ஆனால் பாருங்கள், 23 வயது அண்ணன் தம்பி இருவருக்கும் மலேசிய தேசியப் பல்கலைக்கழகம் கிடைத்ததாம். அதிலும், இருவருக்குமே ஊடக-தொடர்புத் துறைதான் கிடைத்ததாம்.
சிறு வயதிலேயே இருவரும் போட்டிப் போட்டுக் கொண்டு படிப்பார்களாம். அதற்கு ஏற்றாற்போல, கிரி 3.70 CGPA-வும் ஹரி
3.61 CGPA-வும் எடுத்து முதல்நிலை இளங்கலைப் பட்டம் பெற்றுள்ளனர். இந்நிலையில், அடுத்து இருவரும் தொடர்புத் துறையில் முதுகலைப் படிப்பை மேற்கொள்ளப்போகும் கிரி-ஹரிக்கு வாழ்த்துகளைத் தெரித்துக் கொள்வோம்!