Latestமலேசியா

அப்டவுன் ஷா ஆலாமின் 32 கடைகள் தீக்கிரை!

ஷா ஆலாம், நவ.12- செக்சன் 24, அப்டவுன் ஷா ஆலாமிலுள்ள பழைய கடைத் தெருவில் மூன்று வரிசைகளை உட்படுத்திய 32 கடைகள் தீக்கிரையாகின. இத்தீச்சம்பவம் இன்று விடியற்காலை 5 மணி அளவில் நிகழ்ந்தது.

முதலாம் இரண்டாம் வரிசையில் உள்ள கடைகள் 100 விழுக்காடு தீயில் அழிந்தன. மாறாக, மூன்றாம் வரிசையில் உள்ள கடைகள் 50 விழுக்காடு தீயில் சேதமுற்றதாக ஷா ஆலாம் தீயணைப்பு மீட்புத் துறைத் தலைவர் யூஸ்ரி பஸ்ரி தெரிவித்தார்.

இந்த தீ விபத்து குறித்து காலை 5.37-க்கு தகவல் கிடைத்ததாகவும், 5.43 மணிக்கெல்லாம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்தை அடைந்து தீயை அணைக்கும் நடவடிக்கையில் ஈடுப்பட்டதாகவும் அவர் கூறினார்.

தீயணைப்பு வீரர்கள் காலை 6.43 மணி அளவில் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். காலை 7.03 மணிக்கு தீ முற்றாக அணைக்கப்பட்டது. இந்த விபத்தில் உயிருடற்சேதம் ஏதும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker