Latestமலேசியா

தபாலில் வந்த மலைப் பாம்பா? அதிர்ச்சியில் போஸ் மலேசியா பணியாளர்கள்!

ஜோர்ஜ் டவுன், நவ.12- பேராக், கோப்பேங்கில் இருந்து பினாங்கிலுள்ள மலேசிய அறிவியல் பல்கலைக்கழக மாணவர் ஒருவருக்கு போஸ் மலேசிய அஞ்சல் சேவை வாயிலாக அனுப்பப்பட்ட பொட்டலத்தில் உயிருடன் மலைப் பாம்பு இருந்திருக்கிறது. பொறுப்பற்ற தரப்பின் இத்தகைய செயல் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடியது என போஸ் மலேசியா கருத்துரைத்துள்ளது.

இத்தகைய செயல் போஸ் மலேசியா பணியாளர்கள், பொதுமக்கள் ஆகியோரின் உயிருக்கு ஆபத்தை விளைவிப்பதோடு போஸ் மலேசியா நிறுவனத்தின் பணிகளையும் பாதிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பந்து விளையாட்டு காலணி என்று எழுதப்பட்டிருந்த பொட்டலத்தில் மலைப் பாம்பு இருக்கும் என யாரும் எண்ணி இருக்க மாட்டார்கள். அந்த பொட்டலத்தில் ஏதோ ஊர்ந்து செல்வது போல் இருந்ததால் சந்தேகத்திற்குரிய அந்தப் பொட்டலத்தை திறந்து பார்த்ததில் அதில் மலைப்பாம்பு உயிருடன் இருப்பதைக் கண்டு போஸ் மலேசியா பணியாளர் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

அந்த பொட்டலத்தில் இருந்த மலைப்பாம்பின் படம் சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வரும் நிலையில், பலரும் அச்செயலைக் கண்டித்து கருத்து வெளியிட்டு வருகின்றனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker