Latestமலேசியா

மலேசியாவும் சிங்கையும் இரட்டையர்கள்! -துன் மகாதீர்

சிங்கப்பூர், நவ.12- மலேசியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையேயான உறவில் பரஸ்பர மரியாதையும் சிறந்த பொருளாதார உறவுகளும் நிலவ வேண்டியது அவசியம் என்று துன் டாக்டர் மகாதீர் வலியுறுத்தினார்.

இரு அண்டை நாடுகளுக்கும் இடையே உறவுகள் இரட்டையர்களுக்கு சமமானது என்று அவர் வர்ணித்தார். மலேசியாவும் சிங்கப்பூரும் இரட்டையர்கள். ஒருவேளை, இரட்டையர்களில் முதலில் பிறந்தவர் வேண்டுமானால், அடுத்துப் பிறந்தவரைக் காட்டிலும் கொஞ்சம் பெரியவராக தோன்றலாம் என்று துன் மகாதீர் சுட்டிக்காட்டினார்.

இரு நாடுகளும் தொடர்ந்து நல்லுறவோடு வாழ முடிகிறது என்பது குறிப்பிடத்தக்கது என்றார் அவர். ஒன்றாய் இருந்த நாடுகள் பிரிந்த பின்னர், ஒருவருக்கொருவர் ஒத்துழைத்து, ஒருவருக்கொருவர் உதவிக் கொள்வதை நாம் காண்பது இப்போதெல்லாம் வெகு சிரமம் என்றார் அவர்.

சிங்கப்பூருக்கு இரண்டு நாள் அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்டிருக்கும் துன் மகாதீர் இன்று நண்பகல் விருந்தில் சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப் மற்றும் பிரதமர் லீ ஷியென் லூங்குடன் கலந்து கொண்டார்.

இவ்விரு நாடுகளும் ஒன்றை ஒன்று சார்ந்து வாழும் நாடுகள் என்று சுட்டிக்காட்டிய துன் மகாதீர், மலேசியாவின் மிகப்பெரிய வர்த்தக் பங்காளியாக சிங்கப்பூர் விளங்குவதாக சொன்னார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker