Latestமலேசியா

‘ஸ்மார்ட்’ சுரங்கப்பாதையில் வெள்ளம்; பயத்தில் கார் மீதேறிக் கொண்ட ஆடவர்!

கோலாலம்பூர்,நவ.12- நேற்று மாலை பெய்த கடுமையான மழையை அடுத்து ஜாலான் துன் ரசாக் அருகேயுள்ள ‘ஸ்மார்ட்’ சுரங்கப்பாதையில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. கண்ணிமைக்கும் நேரத்தில் வெள்ள நீர் பெருகிட்டதால் கார் சன்னல் வழியாக வெளியேறி காரின் மீது ஏறிக் கொண்டார் ஆடவர் ஒருவர்.

சுரங்கப்பாதைக்குள் நீர் பீரிட்டு பாய்ந்து வந்ததை பார்த்த பயத்தில் 26 வயது தே என்ற அந்த ஆடவர் மீட்புப் படையினர் வரும் வரையில் தனது ஹோண்டா சிவிக் கார் மீது ஏறிக் கொண்டாராம்.

பின்னர், மீட்புப் படையினரை தன்னை காப்பாற்றி கொண்டுச் சென்றதாக தே தெரிவித்தார். ஆனால், வாங்கி ஓராண்டு ஆகும் அவரது கார் கடுமையாக சேதமுற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

நேற்று மாலை 5.56 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. தேவுடன் மேலும் 4 வாகனமோட்டிகள் ஸ்மார்ட் சுரங்கப்பாதையில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கினர். அவர்களையும் மீட்புப் படையினர் காயம் ஏதும் ஏற்படாமல் மீட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker