Latestமலேசியா

இவ்வாண்டு 421,706 மாணவர்கள் SPM தேர்வெழுதுகிறார்கள்!

காஜாங்,நவ.13- இன்று தொடங்கி டிசம்பர் 13-ஆம் தேதி வரை நாடு முழுவதுமும் 421,706 ஐந்தாம் படிவ மாணவர்கள் எஸ்.பி.எம் தேர்வை எழுதுகிறார்கள்.

அத்தேர்வை முன்னிட்டு நாட்டில் மொத்தம் 3,308 தேர்வு மையங்கள் திறக்கப்பட்டுள்ளதாகவும், 33,631 பணியாளர்தேர்வு கண்காணிப்பாளர்களாக வேலைக்கு அமர்த்தப்பட்டிருப்பதாகவும் கல்வி துணையமைச்சர் தியோ நீ சிங் தெரிவித்தார்.

இவ்வாண்டின் எஸ்.பி.எம் தேர்வின் தேர்ச்சி விகிதம் கடந்தாண்டை காட்டிலும் சிறப்பாக இருக்கும் என நம்பப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

இன்று காலையில் காஜாங்கிலுள்ள சவ்ஜானா இம்பியான் இடைநிலைப்பள்ளையில் எஸ்.பி.எம் மாணவர்களுடன் அளவளாவிய பின்னர் தியோ செய்தியாளர்களிடம் பேசினார்.

இதனிடையே, வெள்ளம் ஏற்படும் ஆபத்து இருக்கும் தேர்வு மையங்கள் முன்கூட்டியே கண்டறியப்பட்டுள்ளதாகவும், ஒருவேளை வெள்ளம் ஏற்பட்டால் என்ன செய்யவேண்டும் என்றெல்லாம் கலந்தாலோசிக்கப்பட்டு விட்டதாகவும் துணையமைச்சர் சொன்னார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker