உலகம்

விசாரணையின்றி தடுப்பு காவல்; கடும் சட்டங்கள் நீக்கம்?

கோலாலம்பூர், நவ.13- -பாதுகாப்பு சட்டங்களுக்கு கீழ், வழக்கு விசாரணையின்றி தடுப்பு காவலில் வைக்கப் படுவது தொடர்பிலான சட்டங்களை அரசாங்கம் பரிசீலனை செய்யும். முடிந்தவரை அச்சட்டங்களை அகற்ற அரசாங்கம் முயற்சி செய்யவிருக்கிறது என்று உள்துறை அமைச்சர் டான்ஶ்ரீ முகைதீன் யாசின் கூறினார்.

‘சோஸ்மா’ எனப்படும் பாதுகாப்பு குற்றச்செயல் மீதான சிறப்பு நடவடிக்கை சட்டம், ‘போகா’ எனப்படும் குற்றச்செயல் தடுப்பு சட்டம் மற்றும் ‘பொடா’ எனப்படும் பயங்கரவாத தடுப்புச் சட்டம் போன்ற சட்டங்கள் குறித்து அரசாங்கம் பரிசீலனை செய்கிறது.

சம்பந்தப்பட்டவர்களின் பரிந்துரைகள் மற்றும் கருத்துக்களை அரசாங்கம் திரட்டி வருகிறது. இந்தச் சட்டங்கள் குறித்த யோசனைகள் அமைச்சரவையில் ஏற்றுக் கொள்ளப் பட்ட பின்னர், அவற்றை அகற்றும் நோக்கில், அரசாங்கம் நாடாளுமன்றத்தில் மசோதாவை தாக்கல் செய்ய வேண்டும் என்று என்று அவர் சொன்னார்.

“அச்சட்டங்கள் தொடர்பிலான பரிசீலனைகளை சட்டத்துறை தலைவர் அலுவலகம் பரிசீலனை செய்து முடித்தப் பின்னர், அந்த பரிசீலனைகள் அமைச்சரவைக்கு கொண்டுச் செல்லப் படும். அதன் பின்னர், அவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப் படும்” என்று முகைதீன் விளக்கினார்

“கூடிய விரைவில் இச்சட்டங்கள் குறித்தான பரிந்துரைகள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப் பட வேண்டும் என்பது எனது விருப்பம்” என்று முகைதீன் பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் மரியா சின் கேள்விக்கு பதிலளித்தார்.

சோஸ்மா, போகா மற்றும் பொடா போன்ற சட்டங்கள் ஏன் இன்னும் அமலில் உள்ளன என்று மரியா சின் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.

சோஸ்மா சட்டத்தின் கீழ், 2,000 பேரும், போகா சட்டத்தின் கீழ் 475 பேரும், பொடா சட்டத்தின் கீழ் 9 பேரும் தற்போது தடுத்து வைக்கப் பட்டுள்ளனர் என்று முகைதீன் தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker