Latestமலேசியா

11 மாதக் குழந்தை பாலியல் கொடுமைக்கு பலி! வெளிவரும் உண்மைகள்!

காஜாங், நவ.13- பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி மரணமடைந்த 11 மாதக் கைக்குழந்தை நூர் முவாஸாரா உல்ஃபா, பாலியல் கொடுமைக்கு உட்படுத்தப் பட்ட நாளன்று, காலை நேரத்தில் குளிப்பாட்டப் பட்டுள்ளார் என்பது உள்பட பல புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன என்று காஜாங் போலீஸ் தலைவர் ஏசிபி அகமட் ஸாபிர் கூறினார்.

அக்குழந்தையின் பராமரிப்பாளரான பெண்ணும் அவருடைய கணவனும், இந்தத் தகவலை விசாரணையின் போது தங்களிடம் தெரிவித்தாக அகமட் ஸாபிர் சொன்னார். குழந்தையின் பாலியல் கொடுமைக்கு அந்தக் கணவன் தான் காரணம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

“இதுவரை, அக்குழந்தையை தாம் பராமரித்ததில்லை என்று கூறி வந்த அந்த ஆடவன், இன்று, தாம் அக்குழந்தையை குளிப்பாட்டி, உடை உடுத்தி விட்டதாக எங்களிடம் தெரிவித்தான். இருந்த போதிலும், அந்தக் குழந்தையை தாம் வதைக்கவில்லை தொடர்ந்து கூறி வருகிறான்” என்று அவர் செய்தியாளர்கள் கூட்டத்தில் கூறினார்.

அந்தக் குழந்தையின் மரணம் தொடர்பில் கைதாகியுள்ள அக்குழந்தையின் பராமரிப்பாளரின் தடுப்புக் காவல் இன்றோடு முடிவடைகிறது. அந்தப் பராமரிப்பாளரின் கணவனின் தடுப்புக் காவல் நாளை முடிவடையும்.

“சந்தேகத்தின் அடிப்படையில் கைதாகியுள்ள அந்த ஆடவன், போதைப் பொருள் உட்கொண்டிருந்தான் என்பது சோதனை வாயிலாக தெரிய வந்துள்ளது. அவனுக்கு மனநிலை பாதிப்பு ஏதும் உண்டா? என்பது குறித்து நாங்கள் சோதனை செய்யவுள்ளோம் என்று ஓசிபிடி அகம்ட் சாலிர் சொன்னார்.

“இதுவரை, 2002-ஆம் ஆண்டு குழந்தை பாதுகாப்பு சட்டத்தின் 31(1) பிரிவின் கீழ் விசாரணை செய்யப் பட்ட இச்சம்பவம், இனிமேற்கொண்டு, குற்றவியல் சட்டம் 302-ஆவது பிரிவின் கீழ் விசாரணை செய்யப் படும்” என்று அகமட் ஸாபிர் விவரித்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில், செர்டாங் மருத்துவமனையில் இரண்டு நாட்களுக்கு முன்னர் அனுமதிக்கப் பட்டு, சிகிச்சை பலனளிக்காமல், அக்குழந்தை மரணமடைந்தது.

கூர்மையற்ற ஆயுதம் கொண்டு தலைப்பகுதியில் தாக்கப் பட்டதால், அக்குழந்தை இறந்துள்ளது என்பது பிரேத பரிசோதனை வாயிலாக தெரியவந்துள்ளது. அந்தக் குழந்தையின் பிறப்பு உறுப்புகளில் கடுமையான காயங்கள் இருந்தன என்றும் பிரேத பரிசோதனை அறிக்கை கூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker