Latestமலேசியா

33 குற்றங்களுக்குரிய மரணதண்டனை: அகற்றியது அமைச்சரவை!

கோலாலம்பூர், நவ.13- குற்றவியல் சட்டத்தின் 302-ஆவது பிரிவின் கீழ் கொலைக் குற்றத்திற்காக விதிக்கப் படும் மரண தண்டனை உட்பட, எட்டு சட்டங்களின் கீழ் பதிவாகியிருந்த 33 குற்றங்களுக்கான மரண தண்டனையை அமைச்சரவை அகற்றியுள்ளது என்று பிரதமர் துறையின் அமைச்சர் டத்தோ லீவ் வுய் கியோங் கூறினார்.

1971-ஆம் ஆண்டின் துப்பாக்கிச் சட்டம், 1960-ஆம் ஆண்டின் துப்பாக்கிச் சட்டம், 1961-ஆம் ஆண்டின் கடத்தல் சட்டம், மற்றும் 1972-ஆம் ஆண்டின் துப்பாக்கிச் சட்டம் ஆகிய சட்டங்களின் கீழ் விதிக்கப் படும் மரண தண்டனைகள் அகற்றப் பட்டுள்ளன என்று அவர் சொன்னார்.

“அமைச்சரவையில் எடுக்கப் பட்ட அந்த முடிவு குறித்து, இதர அமைச்சுகளுக்கு குறிப்பாணைகள் பகிரப் பட்டுள்ளன. அவர்களின் பின்னூட்டத்தை தெரிந்துக் கொள்ளவே அந்தக் குறிப்பாணைகள் பகிரப் பட்டுள்ளன” என்று அவர் கூறினார்.

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker