Latestமலேசியா

அமைச்சரவை மறுசீரமைப்பா? பக்காத்தான் அமைச்சர்களுக்கு தகுதி இல்லையா? -நஜிப்

கோலாலம்பூர், நவ.14- பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் அமைச்சரவை, மறுசீரமைக்கப் படும் என்ற தகவல்கள் அக்கூட்டணியின் அமைச்சர்கள் அந்தப் பதவிகளை வகிக்க தகுதியானவர்கள் தானா? என்ற கேள்வியை உருவாக்கி இருக்கிற என முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் கேள்வி எழுப்பினார்.

பொதுவாக, அமைச்சரவை உறுப்பினர்கள், தங்களின் பதவிகளை ஏற்று 18 மாதங்கள் முடிவடைந்த பின்னரே, அமைச்சரவை மறுசீரமைக்கப் பட வேண்டும் என்ற மரபு வழக்கத்தில் இருப்பதாக அவர் கூறினார்.

“ஒரு அல்லது இரு நாட்களில், அமைச்சரவை மறுசீரமைக்கப் படுகிறது என்றால், அது நமது நாட்டின் மரபில் இல்லை. அதன் அடிப்படையில், பதவி ஏற்றிருக்கும் அமைச்சர்கள், தங்களுக்கு வழங்கப் பட்ட பதவிகளை சரியாக செய்யவில்லை அல்லது அவர்களுக்கு வழங்கப்பட்ட பதவிகளுக்கு அவர்கள் தகுதியற்றவர்களாக உள்ளனர் என்றே பொருள்படும்” என்று நஜிப் சொன்னார்.

அமைச்சரவை மறுசீரமைப்பிற்கும், பிகேஆர் கட்சித் தேர்தலுக்கும் சம்பந்தம் ஏதும் இருக்கக் கூடுமா என்ற கேள்விக்கு, அந்த மாற்றங்களுக்கான காரணமாக பிகேஆர் கட்சித் தேர்தலை கருத்தில் கொள்ள வேண்டுமா இல்லையா என்பதை பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் தான் முடிவு செய்ய வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

அமைச்சர்களுக்கு வழங்கப் பட்ட பொறுப்புகளை அவர்கள் சரிவர செய்யவில்லை என்பதால் தான் இந்த மறுசீரமைப்பு நிகழ்த்தப் படுகிறது என்று தாம் நம்புவதாக நஜிப் கூறினார்.

அமைச்சரவை அமைச்சர்களின் செயலாக்கம் குறித்து மதிப்பீடு செய்யக் கூறிய போது, தாம் எதிர்கட்சியைச் சேர்ந்தவர் என்றும், அதனால், தாம் அவர்களை மதிப்பீடு செய்ய முடியாது என்றும் அவர் தெரிவித்துக் கொண்டார்.

இருந்த போதிலும், அவர்களுக்கு அதிக மதிப்பெண்களை தாம் தர முடியாது என்றும் அவர் சொன்னார். பொதுமக்கள் தான் அந்த அமைச்சர்களை மதிப்பீடு செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker