Latestமலேசியா

சீபில்ட் கோயில் இடமாற்றம்: நீதிமன்ற உத்தரவை மதிப்போம்- நிர்வாகம்

சுபாங் ஜெயா,நவ.14- சீபில்ட் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தை இடம் மாற்ற வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டதைப் பின்பற்றாமல் ஆலயத்தின் ஒரு தரப்பு போர்க்கொடி தூக்கி வந்தாலும், கே.செல்லப்பா தலைமையிலான தரப்பு நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றுவது அவசியம் என்கிறார்.

“உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு நாம் மதிப்பளிக்க வேண்டும். அதனை பின்பற்றாமல் தொடர்ந்து தகராறு செய்தூ வந்தால் இதற்கு நல்ல முடிவே கிடைக்காமல் போய்விடும்” என செல்லப்பா கேட்டுக் கொண்டுள்ளார்.

யூஎஸ்ஜே2இல் 40 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள இந்த ஆலயம் தொடர்பாக நீதிமன்றத்தில் தீர்ப்பு அளிக்கப்பட்ட பின்னரும் அதனை தற்போது நாகராஜ் தரப்பு பின்பற்ற மறுக்கிறது. இந்த ஆலயம் நூற்றுக்கணக்கான ஆண்டுகால வரலாற்றைக் கொண்டுள்ளதாக நாகராஜ் தரப்பு கூறிவருகிறது. ஆனால், 1974-ஆம் ஆண்டில்தான் அந்த ஆலயம் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த வழக்கில், அருகே உள்ள நிலத்தில் புதிய ஆலயத்தை நிர்மாணிக்க 15 லட்சம் ரிங்கிட் வழங்குவதாக ஒன் சிட்டி நிறுவனம் கூறியதைத் தொடர்ந்து அந்நிலத்தை ஒப்படைக்க ஆலயத் தரப்பு ஏற்கெனவே இணக்கம் தெரிவித்திருந்தது. எனினும், ஆலயத் தலைமைத்துவ பொறுப்பை யார் ஏற்பதென செல்லாப்பாவுக்கும் நாகராஜுக்கும் இடையே ஏற்பட்ட தகராறை அடுத்து நீதிமன்றத்தின் உத்தரவைப் பின்பற்ற நாகராஜு மறுத்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், “நாங்கள் அனைத்தையும் முறையாகச் செய்து விட்டதோடு மட்டுமில்லாமல் அனைத்துத் தரப்பினருடனும் உடன்பட்டு விட்டோம். சட்டத்தில் உள்ள அனைத்தையும் பின்பற்றி ஆலயத்தை நிலை நிறுத்துவதற்கான அனைத்து வசதிகளையும் சிறப்பாக மேற்கொண்டு விட்டோம்” என ஒன் சிட்டி தரப்பு கூறியுள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker