Latestமலேசியா

செனாவாங் டோல்: கார் போகும் பாதையில் நுழைந்து திக்குமுக்காடிய லோரி!

சிரம்பான்,நவ.14- செனாவாங் டோல் சாவடியில் கனரக வாகனங்கள் நுழையும் பாதையில் நுழைவதற்கு பதிலாக தவறுதலாக சிறுரக வாகனங்களின் பாதையில் நுழைந்த லோரி ஒன்று தடுப்பு கம்பியை மோதித் தள்ளியது.

இந்தச் சம்பவம் நேற்றிரவு 7.04 மணிக்கு நிகழ்ந்தது.

ஓட்டுநர் லோரியை நிறுத்துவதற்குள் லோரி தாழ்வாக அமைந்திருந்த தடுப்பு கம்பியை மோதியதாக கூறப்படுகிறது. அதனால், சிறிது நேரத்திற்கு சம்பந்தப்பட்ட பாதை மட்டும் மூடப்பட்டிருந்தது. எனினும், அதனால் அங்கு போக்குவரத்து ஏதும் பாதிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.

இச்சம்பவத்தில், உயிருடற்சேதம் ஏதும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker