Latestஉலகம்

பயங்கர இடி மழையில் சிக்கிய விமானம்: சாதுர்யமாக தரையிறக்கிய விமானிகள் -(VIDEO)

மாட்ரிட். நவ.14- மோசமான வானிலை காரணமாக பயங்கர இடி மற்றும் மழைக்கு நடுவே விமானம் சிக்கிய போதிலும் அந்த விமானத்தை பயணிகளுடன் விமானிகள் பத்திரமாக தரையிறக்கிய வீடியோ வெளியாகி பரபரப்பாகி வருகிறது.

போயிங் 737-800 என்ற விமானம் ஸ்பெயின் பல்மா- டி மல்லோர்காவில் தரையிறங்கி உள்ளது. அப்போது மோசமான வானிலை காரணமாக இடியுடன் பயங்கர மழை பெய்து கொண்டிருந்தது. காற்றின் வேகமும் மணிக்கு 40 கிலோமீட்டர் வேகம் இருந்ததால் மழை மற்றும் இடி காரணமாக விமானத்தில் இருந்த வைப்பர்கள் அதிவேகமாக இயங்கின.

மழை காரணமாக விமானத்தின் கண்ணாடியில் சரியாக தெரியாத நிலையிலும் விமானி எந்தவொரு பதற்றமுமின்றி பத்திரமாக தரையிறக்கிய சாதூர்யம் பலரால் பாராட்டப்பட்டது.

விமானிக்கு தரையிறங்கும் பகுதி தெரிய வேண்டும் என்பதற்காக ஓடு தளத்தில் விளக்குகள் போடப்பட்டிருக்கும்.. இறுதியாக ஓடுதளத்தில் இறக்கிய விமானம் சற்று தூரம் தள்ளிச் சென்று நின்றது. மோசமான வானிலை காரணமாக விமானத்தை விபத்திலிருந்து காப்பாற்றி பத்திரமாக தரையிறக்கிய விமானிகளுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker