Latestமலேசியா

சுங்கை பூலோ போலீஸ் தலைவராக பெண்மணி நியமனம்!

சுங்கை பூலோ,நவ.15- கோலாலம்பூர் போலீஸ் தலைமையகத்தின் மகளிர், சிறார் பாலியல் குற்றப்புலனாய்வுப் பிரிவின் அதிகாரி ஷாபாத்தோன் அபு பாக்கார் சுங்கை பூலோ மாவட்ட போலீஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கோலாலம்பூர் போலீஸ் தலைமையகத்தின் குற்றச்செயல் ஒழிப்பு, சமூக பாதுகாப்புத் துறைக்கு சோமு சுப்ரமணியம் மாற்றலாகிச் செல்வதால் அவருக்கு பதிலாக ஷாபாத்தோன் போலீஸ் தலைவர் பொறுப்பை ஏற்றுள்ளார்.

ஷாபாத்தோனின் நியமனம் வரலாற்றுப்பூர்வ நிகழ்வாகக் கருதப்படுகிறது. ஏனெனில், சிலாங்கூரில் இந்த உயரிய பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ள முதல் பெண்மணியாக அவர் திகழ்கிறார்.

சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ மஸ்லான் மன்சோரின் முன்னிலையில், சோமு சுப்ரமணியம் இதுநாள் வரை தாம் வகித்த பொறுப்பை ஷாப்பாத்தோனிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker