Latestஉலகம்

நாடாளுமன்றத்தை போர்க்களமாக மாற்றிவிட்டு அமைதியாக சென்ற மகிந்த: வேடிக்கை பார்த்த ரணில்!

கொழும்பு, நவ.15- இன்றைய நாடாளுமன்ற அமர்வில், மகிந்த ராஜபக்சேவுக்கு எதிராக வாக்கெடுப்பு நடத்த வேண்டாம் என தெரிவித்து பெரும் பதற்றம் ஏற்பட்டது. சபாநாயகரின் ஆசனத்தை முற்றுகையிட்ட மகிந்த அணியினர் பெரும் குழப்பத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து சபாநாயகரின் ஆசனத்தை சுற்றி ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் சூழ்ந்து கொண்டதுடன் நெருங்க விடாமல் சபாநாயகரை பாதுகாத்தனர்.

இந்நிலையில், சபாநாயகரின் மேசையில் இருந்த அனைத்து பொருட்களையும் மகிந்த ஆதரவாளர்கள் தட்டி விட்டதுடன் சண்டையிட்டதையும் காணக்கூடியதாக இருந்தது. மேலும் சபாநாயகரின் ஆசனத்திற்கு தண்ணீர் ஊற்றி நனைத்ததுடன் குப்பைகளையும் போட்டுவைத்திருந்தனர்.

நிலைமை மோசமடைந்த நிலையில் சபாநாயகர் தமது ஆசனத்தை விட்டு எழுந்து சென்றார்.. மேலும், மகிந்தவும் தமது ஆசனத்தை விட்டு எழுந்து மெதுவாக வெளியேறினார். இத்தனை குழப்பங்களையும் ஓர் ஓரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த ரணிலும் சற்று நேரம் அமர்ந்து இருந்து விட்டு அவரும் எழுந்து சென்றார்.

அங்கிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் “தப்பி ஓடிவிட்டார்” என  கூச்சலிட்டு நாடாளுமன்றத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker