Latestமலேசியா

3 MRT நிலையங்கள் நவம்பர் 17,18-இல் மூடப்படும்!

பெட்டாலிங் ஜெயா, நவ.15- கிவாசா டாமான்சாரா, கம்போங் செலாமாட் மற்றும் சுங்கை பூலோ ஆகிய எம்.ஆர்.டி நிலையங்களின் பாதை தடங்களில் பராமரிப்பு பணிகள் நவம்பர் 17 மற்றும் 18 தேதிகளில் மேற்கொள்ளப்படும் என்பதால், அன்றைய தேதிகளில் அந்நிலையங்கள் மூடப்படும்.

சுங்கை பூலோ-காஜாங் இரயில் பாதைகளின் ஒரு பகுதி, சுங்கை பூலோ-செர்டாங்-புத்ராஜெயா இரயில் பாதைகளின் பகுதியாக மாற்றப்படுவதால், அந்த எம்.ஆர்.டி நிலையங்கள் மூடப்படுவதாக ரேப்பிட் ரயில் நிறுவனத்தின் சுங்கை பூலோ-செர்டாங்-புத்ராஜெயா பாதையின் எம்.ஆர்.டி தலைமை செயல் அலுவர் அஸ்மி முகமட் ஸாயின் கூறினார்.

“கிவாசா டாமான்சாரா மற்றும் சுங்கை பூலோ எம்.ஆர்.டி நிலையங்களில் இடையிலான ரயில் பாதைகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப் படுவதால், அந்த மூன்று நிலையங்கள் மூடப்படுகின்றன.

“அவ்விரு நாட்களில், சுங்கை பூலோ-காஜாங் செல்லும் இரயில்கள், கிவாசா செண்ட்ரல் நிலையங்களோடு முடிவடைந்து, காஜாங்கிற்கு திரும்பிச் செல்லும்” என்று செய்தியாளர்களிடம் அவர் சொன்னார்.

கிவாசா செண்ட்ரல் மற்றும் சுங்கை பூலோ நிலையங்களிலிருந்து 15 நிமிடங்களுக்கு ஒரு முறை இலவச பேருந்து சேவைகள் வழங்கப்படும் என்று அஸ்மி கூறினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker