Latestஇந்தியாஉலகம்விளையாட்டு

அனைத்துலக செஸ் போட்டி சாம்பியன் பட்டம் வென்றார் விஸ்வநாதன் ஆனந்த்!

கொல்கத்தா, நவ.16- அனைத்துலக சதுரங்கப் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீரர் விஸ்வநாதன் ஆனந்த் சாம்பியன் பட்டம் வென்றார்.

அனைத்துலக அளவிலான சதுரங்கப் போட்டி கொல்கத்தாவில் நடைபெற்றது. அதில் 10 வீரர்கள் பங்கேற்று விளையாடினர். இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், அமெரிக்காவை சேர்ந்த ஹிகாரு ஆகியோர் இருவருக்கும் இடையே பலப்பரிட்சை நடந்தது.

இருவரும் சிறப்பாக விளையாடிய நிலையில், தலா 12.5 புள்ளிகள் பெற்றனர். இதையடுத்து நடந்த டைபிரேக்கர் போட்டியில், ஆனந்த் வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தார்.

2-ஆவது போட்டி சமநிலையில் முடிந்த நிலையில், ஆனந்த் வெற்றிபெற்று சாம்பியன் கோப்பையை கைப்பற்றினார்.

இந்தப் போட்டிகளில், இந்தியாவின் ஹரிகிருஷ்ணா 6-ஆவது இடத்தையும், விதித் 7-ஆவது இடத்தையும் பிடித்தனர். சூர்யசேகர், சென்னையை சேர்ந்த பிரக்ஞானந்தா ஆகியோர் கடைசி 2 இடங்களை பிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker