Latestமலேசியா

குடிநுழைவு வழிமுறைகளில் புதிய மாற்றங்கள்! -மொகிடின்

புத்ராஜெயா, நவ.17- சிறந்த செயலாக்கம், பாதுகாப்பு மற்றும் செலவுகளைக் குறைக்கும் வகையிலான புதிய குடிநுழைவு வழிமுறைத் திட்டம் ஒன்றை உள்துறை அமைச்சு உருவாக்கவிருக்கிறது என்று அமைச்சர் டான்ஶ்ரீ மொகிடின் தெரிவித்தார்.

அதேவேளையில் இந்தப் புதிய வழிமுறை அமலாக்கப்படுவதற்கு முன்பாக, நடப்பு குடிநுழைவு வழிமுறைகளை சீரமைத்து மேம்ம்படுத்தும் வகையிலான ஆலோசனைத் திட்டம் ஒன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்று அவர் சொன்னார்.

வெளிநாட்டு விசா முறை உள்பட குடிநுழைவுத் துறையின் பல்வேறு வழிமுறைகளுக்கு பொறுப்பேற்றுள்ள முகவர்களுடனான சலுகை உடன்பாடுகள் அனைத்தையும் மறு ஆய்வு செய்வதற்கு தாம் உத்தரவிட்டிருப்பதாக டான்ஶ்ரீ மொகிடின் தெரிவித்தார்.

இந்த முகவர்களுடனான உடன்பாடுகள் மற்றும் அவற்றை அமலாக்கம் செய்யும் வழிமுறைகள், அரசாங்கத்தின் நலனுக்கோ அல்லது நாட்டின் பாதுகாப்புக்கோ எத்தகைய பாதிப்பும் இல்லாமல் இருப்பதை உறுதி செய்யவே இந்த மறு ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது என்றார் அவர்.

மலேசியாவுக்கு வரவிரும்பும் சீன மற்றும் இந்திய சுற்றுப் பயணிகளுக்கான eNTRI மற்றும் eVISA உள்பட வெளிநாட்டு ஆன் லைன் விசா முறையில் சில கடுமையான பலவீனங்கள் இருப்பதாக செய்திகள் வெளியாகி இருப்பது குறித்து அரசாங்கம் கவனத்தில் கொள்ளும் என்று அவர் தெரிவித்தார்.

இதனிடையே உடன்பாடுகள் மூலம் சலுகைகளைப் பெற்றுள்ள குடிநுழைவுத் துறை முகவர் நிறுவனங்கள் தொடர்பான முறைகேடுகள் மற்றும் அதிகாரத் துஷ்பிரயோங்கள் குறித்து மலேசிய ஊழல் துடுப்பு ஆணையம் தற்போது விசாரணைகளை நடத்தி வருகிறது என்றார் அவர்.

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker