Latestமலேசியா

பாலியல் தொல்லை: சுங்கை பூலோ மருத்துவமனையின் எலும்பியல் துறைத் தலைவர் பணிநீக்கம்!

புத்ராஜெயா,நவ.16- பயிற்சி மருத்துவர்களுக்கு பாலியல் தொல்லைகள் கொடுத்து வந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்த சுங்கை பூலோ மருத்துவமனையின் எலும்பியல் துறைத் தலைவர் நேற்று முன்தினம் பணி நீக்கம் செய்யப்பட்டதாக சுகாதார அமைச்சர் டத்தோஶ்ரீ டாக்டர் சூல்கிப்ளி அகமட் தெரிவித்தார்.

பணிநீக்கக் கடிதம் நேற்று அவரிடம் வழங்கப்பட்டது. இதற்கு முன் அவர் இடைநீக்கம் மட்டுமே செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சம்பந்தப்பட்ட சீனியர் மருத்துவரை பணிநீக்கம் செய்ய மாமன்னர் அனுமதியளித்த பின்னரே அவருக்கு கடிதம் வழங்கப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

சுங்கை பூலோ மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர்களாக இருந்த ஏறக்குறைய 38 பேர் அந்த சீனியர் மருத்துவரின் பாலியல் தொல்லைகளுக்கு இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. 2009-ஆம் ஆண்டு தொடங்கி சுங்கை பூலோ மருத்துவமனையில் பணியாற்றி வந்த அம்மருத்துவர் இந்த பாலியல் விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது முதல் இரண்டு மாதங்களாக இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker