Latestமலேசியா

வரி செலுத்தாத 40,500 வணிக- குடியிருப்புத் தளங்களில் அடுத்த வாரம் சோதனை!- டிபிகேஎல்

கோலாலம்பூர், நவ.16- சுமார் ரிம.182.7 மில்லியன் வரி பணத்தை செலுத்தாத தலைநகரில் உள்ள 41,503 வணிக மற்றும் குடியிருப்பு வளாகங்களில் அடுத்த வாரம் கோலாலம்பூர் மாநகர் மன்றம் சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளவிருக்கிறது.

செலுத்தப்படாத அந்த வரி பணம் தொடர்பில், அந்தக் குடியிருப்பு மற்றும் வணிக வளாகங்களின் உரிமையாளர்களுக்கு அறிக்கைகள் விடுக்கப்படும் என்று கோலாலம்பூர் மாநகர் மன்ற நிதி துறை இயக்குநர் முகமட் ஹமீம் கூறினார்.

“அந்த வளாகங்களின் உரிமையாளர்களுக்கு 700 அமலாக்க அதிகாரிகள் அறிக்கைகளை வழங்கி, செலுத்தப்படாத வரிப் பணத்தை இரு வாரங்களுக்குள் செலுத்துமாறு அவகாசம் வழங்குவர்.

“அந்த வரியை செலுத்த தவறுபவர்களுக்குச் சொந்தமான வளாகங்கள் சீல் வைக்கப்பட்டு, இழுத்து மூடப்படும்” என்று அவர் செய்தியாளர்களிடம் சொன்னார்.

காலியான வளாகங்கள், 1976-ஆம் ஆண்டு ஊராட்சி சட்டத்தின் 151-ஆவது பிரிவின் கீழ், ஏலம் விடப்படும்.

இன்று துங்கு அப்துல் ரஹ்மான் பகுதியில் நடத்தப்பட்ட சோதனை வாயிலாக, ரிம.1.6 மில்லியன் தொகை வரியை செலுத்தாத 25 வணிக வளாகங்களுக்கு கோலாலம்பூர் நகராண்மை கழகம் சீல் வைத்ததாக முகமட் ஹமீம் தெரிவித்துக் கொண்டார்.

“அதிகப் படியான வரிப் பணத்தை செலுத்தாத வளாகங்களில் உள்ள பொருட்கள் சிலவற்றை நாங்கள் பறிமுதல் செய்வோம். அந்த வளாக உரிமையாளர்கள், செலுத்தப்படாத வரிப் பணத்தின் 30 விழுக்காடை அப்போதே செலுத்த வேண்டும். மீதமுள்ள 70 விழுக்காடு வரிப் பணத்தை, ஒரு வாரத்திற்குள் அவர்கள் செலுத்தி முடிக்க வேண்டும்.

“அவ்வாறு செய்ய அவர்கள் தவறும் பட்சத்தில், அவ்வளாகங்களில் உள்ள மீதப் பொருட்கள் பறிமுதல் செய்யப்படும்” என்றார் அவர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker