Latestமலேசியா

வாகனமோட்டிகளின் சம்மன்களுக்கு 50% கழிவு; போலீஸ் படை திட்டம்!

கோலாலம்பூர், நவ.16- தலைநகரில் உயர்தர போலீஸ் திட்டத்தை ஏற்பாடு செய்யும் தருணங்களில், அத்திட்டத்தில் கலந்து கொள்ளும் வாகனமோட்டிகளின் சம்மன்களுக்கு 50 விழுக்காடு கழிவை வழங்க கோலாலம்பூர் போலீஸ் துறை திட்டமிட்டுள்ளது.

அவ்வாறு செய்வதன் வாயிலாக, போலீஸ் துறையால் ஏற்பாடு செய்யப்படும் அத்திட்டத்தில் கலந்து கொள்ளும் வாகனமோட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோஶ்ரீ மஸ்லான் லாஜிம் கூறினார்.

அதுமட்டுமல்லாது, அத்திட்டங்கள் நடத்தப்படும் வேளையில், கோலாலம்பூர் பகுதிகளில் நிகழும் குற்றச்செயல்கள் குறித்தும் பொதுமக்கள் தங்களிடம் தகவல் தெரிவிக்க, இது ஒரு வாய்ப்பாக அமையும், என்று அவர் தெரிவித்துக் கொண்டார்.

“பொதுமக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக தான் இவ்வாறான திட்டங்களை நாங்கள் அமல்படுத்தியுள்ளோம். பொதுமக்கள் இந்நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்ளும் வேளையில், குற்றச் செயல்கள் மற்றும் பாதுகாப்பு குறித்து நாங்கள் அவர்களுக்கு தேவையான விவரங்களை வழங்க முடியும்” என்று அவர் சொன்னார்.

இதனிடையில், இவ்வாண்டு ஜனவரி மாதம் தொடங்கி, அக்டோபர் மாதம் வரை, வழிப்பறி கொள்ளைகளில் ஈடுபட்ட 135 பேரை, போலீஸ் துறை சிறைப்படுத்தி உள்ளது என்று மஸ்லான் குறிப்பிட்டார்.

“டாங் வாங்கி பகுதியில் தான் அதிகமான வழிப்பறி கொள்ளை சம்பவங்கள் நிகழ்கின்றன. புக்கிட் பிந்தாங் மற்றும் சௌவ் கிட் பகுதிகளில், அச்சம்பவங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன” என்று அவர் கூறினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker