Latestஇந்தியா

கஜா புயலின் கோரத் தாண்டவம் ! தனித் தீவாக மாறிய நகரம்!

சென்னை, நவ.17- தமிழகத்தில் கஜா புயல் காரணமாக வேதாரண்யம் கடுமையாக பாதிக்கப்பட்டதால்,  தொடர்புகள் துண்டிக்கப்பட்டு அப்பகுதி தற்போது தனித் தீவாக காட்சி அளிக்கிறது.

நள்ளிரவு கரையை கடக்க துவங்கிய கஜா புயல் தமிழகத்தில் சில குறிப்பிட்ட பகுதியில் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. அதில் வேதாரண்யம் பார்ப்பதற்கு ஒரு தனித்தீவு போன்று காட்சி தருகிறது.

இதன் காரணமாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வேதாரண்யம் பகுதிக்கு விரைந்து சென்று அது தொடர்பான நடவடிக்கையில் இறங்கியுள்ளார்.

மிகக் கடுமையான அளவில் வேதாரண்யம் பாதிக்கப்பட்டுள்ளது. மரங்கள் எல்லாம் வேரோடு சாய்ந்து கிடக்கின்றன. மின்கம்பிகள் அறுந்து கீழே விழுந்து கிடக்கின்றன. கால்நடைகளுக்கு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளன. 500க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதால் வீடுகளை இழந்து மக்கள் வேதனையுடன் உள்ளனர்.

உணவு மட்டும் குடிநீர் இன்றி மக்கள் அவதிப்படுகின்றனர். மீட்பு பணிகள் துரிதமாக நடந்தாலும் மரங்கள் சாய்ந்திருப்பதால் நாகையிலிருந்து வரும்பாதைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker