Latestமலேசியா

வடிக்கால் பிரச்சனை, ஜாலான் சுங்கை பூலோ வெள்ளத்திற்கு காரணம்!

ஷா ஆலாம்,நவ.17- பெட்டாலிங் மாவட்டத்தில் உள்ள ஐந்து பகுதிகள் கடுமையான மழையை அடுத்து ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.

சுங்கை பூலோ கேடிஎம் நிலையத்திற்கு அருகேயுள்ள ஜாலான் கோலசிலாங்கூர், கம்போங் குபு காஜா, கம்போங் பாயா ஜாராஸ், பண்டார் பாரு சுங்கை பூலோ ஆகியவை நேற்றுமுன்தினம் பெய்த மழையால் வெள்ளத்தில் மூழ்கின.

சுங்கை ஹம்பார் ஆற்றில் வெள்ளம் கரைப்புரண்டோடியதால் கம்போங் பாரு சுங்கை பூலோவில் அமைந்துள்ள 6 வீடுகளிலும் 20 தொழிற்சாலைகளிலும் வெள்ள நீர் 0.6 மீட்டர் உயரத்திற்கு ஏறியது.

கடுமையான மழை மட்டுமல்ல, வடிக்கால் பிரச்சனையினாலும் மழை நீர் செல்ல வழியில்லாமல் அப்பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து பாதிப்பை ஏற்படுத்தியதாக சிலாங்கூர் நீர்பாசன, வடிக்கால் துறை தெரிவித்துள்ளது.

“ஜாலாங் கோலசிலாங்கூரில் அமைக்கப்பட்டுள்ள சாலைத் தடுப்புகள் மழை நீர் சுங்கை காசி ஆற்றுக்கு வழிந்தோட தடையாக இருந்ததால் அங்கு வெள்ளம் ஏற்பட்டது. மாறாக, கம்போங் பாரு சுங்கை பூலோவில் அனுமதியின்றி கட்டப்பட்ட பாலம் விரைவில் உடைக்கப்பட வேண்டும். அந்த பாலத்தின் அமைப்பு சரி இல்லாததால் தான் அங்கு வெள்ளம் ஏற்பட்டுள்ளது” என நீர்பாசன, வடிக்கால் துறை பேச்சாளர் ஒருவர் கூறினார்.

வெள்ள அபாயம் இருக்கும் இந்தப் பகுதிகளில் இனி வருங்காலங்களில் வெள்ளம் மீண்டும் ஏற்படாமல் தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

நேற்றுமுன்தினம் பெய்த கடும் மழையால் பெட்டாலிங் மாவட்டத்தில் 0.6 முதல் 0.9 மீட்டர் வரை வெள்ளம் பெருகியது. எனினும், அந்த வெள்ளத்தை அடுத்து அங்கு துயர்த்துடைப்பு மையங்கள் ஏதும் திறக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Kampung Baru Sungai Buloh Flood (Banjir)

Posted by Soon Lee on Thursday, 15 November 2018

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker