Latestமலேசியா

168 கிலோ எடை கொண்ட பெண்ணை தூக்க உதவிய தீயணைப்பு வீரர்கள்!

சிரம்பான்,நவ.17- எங்கேயாவது தீ விபத்து ஏற்பட்டால் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க படை எடுப்பார்கள். அதே போல உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் விலங்குகள் ஏதும் மக்கள் வாழும் பகுதிக்குள் வந்து விட்டால் அதைப் பிடிப்பதற்காகவும் தீயணைப்பு வீரர்கள் ஓடோடி வருவார்கள். ஆனால்,168 கிலோகிராம் எடை கொண்ட ஒரு பெண்மணியை மருத்துவமனைக்கு கொண்டுச் செல்ல தீயணைப்பு வீரர்கள் உதவிக்காக வந்த சம்பவம் நேற்று சிரம்பானில் நிகழ்ந்தது.

கம்போங் ஜிமாவில் வசிக்கும் அந்த 34 வயது பெண்மணி குளியல் அறையில் இடறி விழுந்து அவருக்கு அடிப்பட்டு விட்டது. சரி மனைவியை சிரம்பான் துவான்கு ஜபார் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லலாம் என்றால் அந்தப் பெண்ணின் உடல் எடை காரணமாக அவரது கணவரால் அவரைத் தூக்க முடியவில்லை.

எனினும், மருத்துவமனைத் தரப்பு சிரம்பான் 2 தீயணைப்பு நிலையத்திற்கு அழைத்து உதவி கேட்டதுதான் சிறிது நேரத்தில் தீயணைப்பு வீரர்கள் அந்தப் பெண்ணின் வீட்டுக்கு வந்து சேர்ந்தனர். 10 நிமிட முயற்சிக்கு பின்னர் அந்தப் பெண்ணை தூக்கிவிட்ட தீயணைப்பு வீரர்கள் அவரை தீயணைப்பு வண்டியில் வைத்து மருத்துவமனைக்கே கொண்டுச் சென்று விட்டனர்.

அவர்களுடன் மருத்துவ அதிகாரிகள் இருவரும் உடன் சென்றனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker