Latestமலேசியா

கணினி அறிவியல்: பள்ளிகளில் புதிய வடிவம் அறிமுகம்! – கோபிந்த் சிங்

செர்டாங், நவ. 18- நாட்டிலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் கணினி மற்றும் புரோக்கிராம் எனப்படும் நிரலாக்கங்களில் கவனம் செலுத்தும் வகையிலான மாதிரி வடிவ திட்டங்களை அறிமுகப்படுத்த வியூகம் வகுக்கப்பட்டு வருகிறது என்று தொலைத் தொடர்பு மற்றும் பல்லூடகத்துறை அமைச்சர் கோபிந்த் சிங் தெரிவித்தார்.

டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் அதிகத் திறன் கொண்ட மனித மூலதனத்தை உருவாக்கும் முயற்சியாக இது அமையும். டிஜிட்டல் புத்தாக்கங்களில் மாணவர்களின் ஆர்வத்தை மேலோங்கச் செய்யும் நோக்கத்தில் பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் இந்த புதிய முனைப்பில் இறங்கி இருக்கிறது என்று அவர் சொன்னார்.

எதிர்காலத்தில் டிஜிட்டல் பொருளாதாரத்தில் வேலை வாய்ப்புக்களை பெறுவதற்கு இது வழிவகுக்கும். அதேவேளையில் இப்போது நாம் அதற்கான பல்வேறு மாதிரி வடிவத் திட்டங்களை ஆராயும் பணியில் ஈடுபட்டுள்ளோம் என்றார் அவர்.

ஜப்பான், தென்கொரியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் இந்தத் துறையில் மிகவும் முன்னேற்றம் கண்டிருப்பதால் அந்நாடுகளின் தொழில்நுட்ப வடிவத்தை நமது பள்ளிகளில் அறிமுகம் செய்வது குறித்தும் ஆராயப் படுகிறது என அமைச்சர் கோபிந்த் சிங் குறிப்பிட்டார்.

 

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker