Latestமலேசியா

சீன எழுத்துள்ள சாலை அறிவிப்பு பலகைகளை உடனடியாக அகற்றுக!- சிலாங்கூர் சுல்தான் உத்தரவு

கோலாலம்பூர்,நவ.19- சிலாங்கூர், ஷா ஆலாமில் உள்ள அனைத்து சீனமொழி அறிவிப்பு பலகையை அகற்றுமாறு சிலாங்கூர் சுல்தான் ஆணையிட்டுள்ளார்.

சுல்தான் ஷாராபுடின் இட்ரிஸ் ஷாவின் அந்தரங்கச் செயலாளர் முகமட் முனிர் பாணி கடிதம் ஒன்றின் வாயிலாக இதனை சிலாங்கூர் அரசாங்கத்திற்குத் தெரிவித்திருக்கிறார்.

எல்லா அறிவிப்பு பலகைகளும் தேசிய மொழியில்தான் இருக்க வேண்டும் என அக்கடிதத்தில் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், சம்பந்தப்பட்ட அறிவிப்பு பலகைகளை உடனடியாக அதாவது டிசம்பர் 11-ஆம் தேதியன்று கொண்டாடப்படவுள்ள சிலாங்கூர் சுல்தானின் 73-ஆவது பிறந்தநாளுக்குள் அகற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker